You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June, 2016
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக காணப்படுவது காய்ச்சலாகும். ஒரு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படும் போது அந்தக் குழந்தைக்கு பாரதூரமான தொற்றுக்கள் உள்ளனவா என்பதை எப்போதும் பரிசோதிக்க வேண்டும். எனவே பெற்றோர்கள் காய்ச்சல் பற்றிய அடிப்படை விடயங்களைத் தெரிந்திருப்பது அவசியமாகும் காய்ச்சல் ஏற்படுவதற்கு பல காரணங்களுண்டு அவற்றில் சில பின்வருமாறு – பல்வேறுபட்ட கிருமித் தொற்றுக்கள் உதாரணம் – வைரசு, பக்ரீறியா, ஒட்டுண்ணிகள் என்பன. எமது உடலிலே ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் அல்லாத, எமது […]
இன்றைய நவீன யுகத்திலே தொழில்நுட்பச் சாதன விருத்தியும், இயந்திரத்தனமான வாழ்க்கை முறையும் மனித ஆரோக்கியத்துக்குச் சவாலாக அமைந்துவிடுகின்றன. அந்த வைகயிலே இன்று வேலை நேரங்கள் போக மீதி நேரங்களில் இணையம், பேஸ்புக், செல்போன் என நேரங்களைக் கழிப்பது அநேகருடைய வழக்கமாகிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு மூளைக்கும் ஏனைய அவயவங்களுக்கும் சற்று ஓய்வைக் கொடுக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். தூக்கமின்மை சம்பந்தமாக மனிதரிடையே காணப்படும் அலட்சியப் போக்கு ஆரோக்கியத்துக்குக் கேடாக அமைந்துவிடுகிறது. இதனை உள மருத்துவவியலாளர்களும், […]
“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்” என்பது இன்றைய காலத்தின் தேவை யான சூழல் சுகாதாரத்தைப் பற்றி இயல்பாககூறுகின்ற இனிமையான திரை இசைப் பாடல் ஆகும். நாளுக்கு இருமுறை நம்மை சுத்தமாக வைத்திருக்க முயல்கிறோம். வீட்டை அழகுபடுத்தி சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் நாம் வாழும் சூழலை மட்டும் சுத்தமாக வைத்திருக்க ஏனோ அக்கறை செலுத்துவதில்லை. அதனால் அசுத்தத்திலேயே வாழவேண்டியநிலை. இதற்கு காரணம் என்ன? நாம் எப்போது, […]
அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் இலங்கையில் இளவயதுத்திருமணங்கள் அதிகரித்து வருவதையும் இதனால் பாரிய உடல், உள, சமூக பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றது என்பதையும் கோடி காட்டி நிற்கின்றது. யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார்…. சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் […]
பூமியில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது அவ்வளவுக்கு அவ்வளவு அசுத்தக் காற்றினால் எமது சுவாசப்பை நிரம்புகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றின் தூய்மைப்படுத்தித்தரும் மரங்களை அழியவிடாது தடுப்போம். நாம் வெட்டும் ஒவ்வோர் மரத்திற்காகவும் பத்து மரங்களையாவது நடுவோம். நன்றி – விளம்பர நிறுவனம் TBWA/PARIS, FRANCE
மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆழுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தை செல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை. இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும் ஆர்ப்பணிப்பும் […]
நன்றி – www.lifebuzz.com
உலகளாவிய அளவில் போஷாக்கின்மையால் 10 இலட்சம் மக்கள் ஆண்டுதோறும் இறப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. இதனைத் தடுப்பதற்கு பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில் உடற்பருமன் அதிகரிப்பால் ஆண்டுதோறும் 30 இலட்சம் பேர் இறக்கின்றனர் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 […]