You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2016

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆவான். கோபம் தன்னையே அழித்துவிடும். மனித தத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்குப் பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்குத் தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. கோபம் வரும் போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை […]

பாடசாலை மாணவர்களிடையே சலரோகமும் சலரோகத்திற்கு முந்திய நிலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். ஒடி விளையாடுவதற்கான நேரங்கள் குறைக்கப்படட்டு தொடர்ச்சியான கல்விச் செயற்பாடுகள் (மாலை நேர கற்பித்தல்) குடிப்பதற்கு அதிகளவில் மென்பானங்களை பாவித்தல் ஆரோக்கியமற்ற உணவுகளை பெருமளவில் உள்ளெடுத்தல் (உதாரணம் மிக்சர், றோல்,சொக்கலேட், ஐஸ்கிறீம் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் மதிய உணவுகளும் ஆரோக்கியமற்ற உணவாக காணப்படல்) தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிகளவு நேரத்தை செலவிடல் பெற்றோர்களிடையே பிள்ளைகளின் நிறை பேணுதல் பற்றி போதிய அறிவின்மை. உடல் […]

ஆடி அடங்கிய ஆவியின் அறிவுரை ஆரிவன் பேர்சொல்லாத பேயனெண்டு நினைக்கிறியள் காரியம் முடிஞ்செனக்குக் கனகாலம் ஆச்சுதப்பா சூரியனும் சுட்டெரிக்கும் சுடுகாடு வீடெனக்கு வீரியமோ குறையவில்லை விளம்புகிறேன் என் கதையை …… ஆடென்ன மாடென்ன அவசரத்திற்கடுததவீட்டுப் பேடென்ன பெரியகடை இறாலென்ன அவிச்ச கரு வாடென்ன வதக்கியதைக் கள்ளோடு சேர்த்தடிக்க கேடென்று தோணவில்லை கெட்ழிஞ்சு போனனப்பா! எண்ணையிலே மிதக்காத எதையும் நான் தொட்டதில்லை வெண்ணெய் இறைச்சியுடன் போத்தலையும் விட்டதில்லை திண்ணையிலே இருந்து ஊர்வம்பளந்த தொழில் தவிர கண்ணைத் திறந்து ஒரு […]

கர்ப்பகாலங்பளில் ஒரே வகையான உணவுகளைத் தொடர்ந்து உண்பதிலும் பார்க்க பல்வேறு வகையான உணவுகளை மாறி மாறி உண்பது பல வழிகளிலும் நல்லது எடை ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. இது பலவகையான ஊட்டச்சத்துக்களை கர்ப்பிணித்தாய்மாருக்கும், வளரும் சிசுவிற்கும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை தொடர்பான நோய்களைக் குறைக்கும் என்று சில ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் அதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்ட நாட்களாகவே […]

தேவையான பொருட்கள் பயற்றம்மா, லீக்ஸ், கோவா, கரட் பயற்றம்மா – ½ Kg லீக்ஸ் – 100g கோவா – 100g கரட் – 100g முருங்கை இலை – 100g சண்டி இலை – 100g வெங்காயம் – 100g பச்சை மிளகாய் – 50g உப்பு – தேவையானளவு கடுகு, சீரகம் – சிறிதளவு தண்ணீர் – தேவையானளவு எண்ணெய்(நல்லெண்ணைய்) – சிறிதளவு செய்முறை பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும். பின்னர் கரட், லீக்ஸ், […]

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 2 ஆயிரத்து 500 பேர் வரை நாட்பட்ட சிறுநீரக நோயினால் (Chronic Renal Failure) பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்கிறார்கள். சிறுநீரகம் (Kidney) செயலிழந்தால் அதனை சாதராண மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியாது. அதற்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை அல்லது குருதி சுத்திகரிப்புச் சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு நாட்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒருதடவை குருதியை சுத்திகரிப்பதற்கு சுமார் 6 ஆயிரம் ரூபாவரை செலவாகும். வாராத்தில் குறைந்தது இரண்டு […]

சலரோக நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விவரணத் தொகுப்பு ஆக்கம் : 23ஆம் அணியின் குழு 1 யாழ் மருத்துவபீட மாணவர்கள் வைத்திய நிபுணர் சி,சிவன்சுதன் M.D அவர்களின் வழிகாட்டல் அனுசரணை இலங்கைவங்கி வடபிராந்தியம்

பிள்ளையானது சிறுவர் பாடசாலைக்கு (pre school) சென்ற பின்பு தான்பாடசாலைக்கு (School) செல்வார்கள். அதேபோல இன்றுஉலகில் காணப்படும் 95% க்கு மேற்பட்டநீரிழிவு (வகைII) நோயாளிகள் நீரிழிவுக்கு முந்தைய நிலை pre Diabetic என்ற நோய் நிலையை அடைந்த பின்புதான் அவர்கள் நீரிழிவு நோயாளிகளாக மாறுகின்றனர். எனவே ஒருவரை நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (pre Diabetic stage) கண்டறிவதன் மூலம் அவர் ஒரு நீரிழிவு நோயாளியாக மாறுவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்த நோய் வருவதை கண்டறிவதற்கும் இது […]

படிக்கும் மாணவர்களுக்கு பகல் நேர குட்டித் தூக்கம் கற்கும் ஆற்றலை அதிகரிக்கும். தற்போது எமது பிரதேசத்தில் மாணவர்களுக்கு போதுமான ஓய்வோ அல்லது அவர்களின் ஏனைய செயற்பாடுகளுக்கான நேரமோ ஒதுக்கப்படாமல் அவர்களை முழு நேரக் கல்விச் செயற்பாடுகளுக்காக மட்டும் நிர்பந்திக்கப்படும் நிலமை உருவாகியுள்ளது. இது அவர்களின் கற்றலையும் ஆளுமை வளர்ச்சியையும், அவர்களின் எதிர்கால ஆற்றலையும் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. மாணவர்களுக்கு ஓய்வும் பகல் நேர குட்டித்தூக்கமும் எவ்வளவு தூரம் கற்றல் செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் […]