You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2016
பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று “நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை”யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. தினமும் ஒரு […]
முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகின்றது. குருதி அமுக்கம், இருதயநோய், நீரிழிவுநோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள்வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம் பெறவேண்டும். சுகதேகியாக இருப்பவர்களும், சிறுவர்களும் அதிகவு முட்டைகளை உணவிலே […]
தேவையான பொருட்கள் பயற்றம்மா ½ Kg லீக்ஸ் 100g கோவா 100g கரட் 100g முருங்கை இலை 100g சண்டி இலை 100g வெங்காயம் 100g பச்சை மிளகாய் 50g உப்பு தேவையானளவு கடுகு, சீரகம் சிறிதளவு தண்ணீர் தேவையானளவு எண்ணெய் (நல்லெண்ணைய்) சிறிதளவு செய்முறை பயற்றம்மாவினை நன்றாக அரித்துக் கொள்ளவும், பின்னர் கரட், லீக்ஸ், கோவா, முருங்கை இலை, சண்டி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் பயற்றம்மா […]
தேவையான பொருட்கள் உழுத்தம் பருப்பு – ½ சுண்டு கடலைப்பருப்பு – ½ சுண்டு வெள்ளை போஞ்சி – 10 பச்சை போஞ்சி – 10 கரட் – பாதி கத்தரிக்காய் – பாதி வெங்காயம், பூடு – 5 சிறிதளவு உப்பு தயிர்( புளித்தது) செய்முறை உழுந்து, கடலைப்பருப்பபை ஊறவைத்து, உழுத்தம் பருப்பை நன்றாக அரைத்துப் பின் கடலைப் பருப்பை் போட்டு அரைத்து, உப்பையும் சேர்த்து, வெட்டிய போஞ்சி வகையையும், வெங்காயம், பூடு, தயிர், கத்தரிக்காய், […]
எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்துவருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய நீரிழிவுநோயாளர்களும், பாதங்களில் பாதிப்புள்ள நீரிழிவு நோயாளர்களும் இந்தக் கருத்தரங்கில் இலவசமாகப் பங்கு பற்றலாம். பாதணிகள் தேவைபற்றிய ஆய்வுகள் நீரிழிவுநோயாளர்களுக்கு இலவசமாகச் செய்து […]
யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு கௌபீ பிட்டு தேவையான பொருட்கள் கௌபீ மா வறுத்தது 125கிராம் தேங்காய்ப்பூ தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை தரமான கௌபீயை எடுத்து சுத்தமாக்கி வறுத்து ( அதிகம் வறுக்கக் கூடாது) அரைத்து மாவை நன்றாக அரித்து அதில் 125 கிராம் அளவில் எடுத்து சாதாரண அரிசிமா பிட்டு செய்வது போல கொதிநீர் விட்டு, அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் […]
பொதுவாக நம் வாழ்க்கையில், குடும்ப சுமைகளை ஆண்களா, பெண்களா சுமக்கின்றனர் எனும் கேள்வி இருந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலை காரணமாக பல குடும்பச்சுமைகளை பெண்களே தனிமையாக வெற்றிகரமாகத் தாங்கி குடும்பத்தினை நல்ல முறையில் நடாத்தி வருகின்றார்கள். ஆண்கள் பொதுவாக குடும்பத்திற்கான வருமானத்தைத் தேடிக்கொள்வதில் பெரும்பங்கு ஆற்றினாலும் பெண்கள் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு மேலதிகமாக குடும்பப் பராமரிப்பு, சமையல், பிள்ளைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களை கவனிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் […]
நீரிழிவு நோயாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் ஏற்படும் மாறாநிலைப் புண்கள் என்பது பொதுவானதாகும். இவை சிறு புண்கள் முதல் நீண்ட காலமாகக் குணமாக்க முடியாத பெரிய புண்கள் வரை வேறுபடலாம். இதனால் நடப்பதில் சிரமம், அன்றாட கருமங்களை ஆற்ற முடியாமை, நீண்ட காலமாக வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டி இருத்தல் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சில வேளைகளில் கால் விரல்களை அல்லது அவயவங்கைளை நிரந்தரமாக சத்திர சிகிச்சையின் மூலம் ( Amputation) அகற்ற வேண்டி […]
எமது சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு தேவையான பொருட்கள் முளைக்கீரை – 100 கிராம் கடலை – 100 கிராம் பயறு – 100 கிராம் போஞ்சி – 100 கிராம் கரட் – 100 கிராம் தக்காளி – 100 கிராம் வெண்டிக்காய் – 100 கிராம் அப்பிள் – 1 வெங்காயம் – 100 கிராம் உள்ளி, புளி – 50 கிராம் மிளகு,சீரகம், வெந்தயம் சிறிதளவு உழுந்துமா – 250 கிராம் ஏனையவை […]
அழுத்தம் (stress) என்பது : நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்ப்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவோ இருக்கமுடியும். stress அவசியாமான ஒன்று. பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு( stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் stress […]