You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2016

1. உலக சுகாதார தினம் (World Health Day) கடந்த 7ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தத் தினம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்? உலக சுகாதார தாபனமானது (World Health Organization) 195Oஆம் ஆண்டிலெிருந்து ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாடிவருகின்றது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இலக்கு களைக் கருத்தில் கொண்டு இந்தத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய சுகாதார […]

முதிய தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலப் பிரச்சினைகள் 45 வயதுக்கு மேற்பட்ட தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகள் மனநலப்பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் காட்டும் ஆதாரங்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஸ்வீடன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 1993 இலிருந்து 2001ம் ஆண்டு வரை ஸ்வீடணில் பிறந்த 26 இலட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளில் பரிசீலித்த ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் 20 இலிருந்து 24 வயதான தந்தைகளுக்கு பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் முதிய தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு […]

எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டை வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமக்கும், தம்மைச்சுற்றி இருப்பவர்களுக்குமாகச் சேர்த்து தம் வாயிலேயே மரண சாம்பலை மங்களமாக வைத்து மகிழும் மனிதர்கள் புகைப்பிடிப்பவர்களே! புகைத்தலினால் உடலின் அத்தனை அங்கங்களும் பாதிப்படைவது நாம் அறிந்ததே. புகைத்தலினால் நுரையீரல் புற்றுநோய், நீண்டகால நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு, அங்க இழப்பு, சிறுநீரக நோய்கள்…. என அடுக்கிக் கொண்டே போகலாம். புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாற்பது வயதுக்கு முன்பாக அப்பழக்கத்தைக் கைவிடுகிறார்கள் என்றால் […]

இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கான ஒரு வழிகாட்டி Tamil Translation Dr.S.Kinthusha Diabetic Centre JTH

எமது குருதியில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் (செங்குழியங்களில்) ஹீமோகுளோபின் (Haemo globin) எனும் இரும்புப் புரதம் உள்ளது. எமது சுவாசத்தின் மூலம் கிடைக்கும் ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபினாக மாற்றி உடல் கலங்களுக்கு செங்குழியங்கள் என்ற படகின்மூலம் எடுத்துச்சென்று சக்தியை வழங்க இது உதவுகின்றது. இவ்வாறு உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சுற்றித்திரியும் போது குருதியில் இருக்கும் குளுக்கோசானது சிறிதளவு இந்தக் ஹீமோகுளோபினிலும் ஒட்டிக் கொள்ளும்தன்மையைக் கொண்டிருக்கிறது. அத்துடன் குருதியில் அதிகளவு குளுக்கோஸ் இருக்குமானால் அது அதிக வீதத்தில் இந்த […]

இலங்கையில் வாய்ப்புற்று நோயானது ஆண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தையும் (30%) பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்றாம் இடைத்தையும் (10%) பெற்றுக்கொள்கின்றது. இலங்கையில் வாய்ப்புற்று நோய்க்கு பிரதான காரணிகளாக பாக்கு மற்றும் புகையிலை பாவனையைக் குறிப்பிடலாம். வாய்ப்புற்றுநோயானது வாயின் எந்தப்பாகத்திலும் ஏற்படலாம். உதாரணமாக நாக்கு, நாக்கிற்கு கீழான பகுதி, உமிழ்நீர்ச் சுரப்பி, கன்னத்தின் உட்புறம், உதடு, முரசு, பற்களைச் சுற்றியுள்ள பகுதி, மெல்லண்ணம்,வல்லண்ணம் உள்நாக்கு, வாய்த்தொடை போன்ற பகுதிகளைக் குறிப்பிடலாம். வாய்ப்புற்று நோயின் அறிகுறிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெள்ளை […]

உன் உயிருக்கு உலை வைத்து வாழ்வுக்கு அஞ்சி நஞ்சுண்ணத் துணிந்துவிட்ட நாயகனே! உடலையும் உயிரையும் ஒட்டவைக்கத்தான் எத்தனை போராட்டங்கள் சுடலை வழி மறித்துச் செய்யும் இந்தச் சுதந்திரப் போரிலே நீயும் போராளியாகிப் பார் உயிரின் மகிமை உனக்குப் புரியும். உனக்காக நஞ்சுண்ட நீ கோலையாகிப் பேழையிலே போனபின் உன் பிஞ்சுகளின் இரைப்பை காற்றைக் குடிக்கும், சுவாசப்பை போல உன்னவரின் கனவுகள் கானலாகி கண்ணீர் தவலைகளில் கலங்கிப் போகும் எம் தேவர் குலம் காக்க கழுத்திலே நஞ்சேந்திய திரு […]