You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2016
நான் 32 வயதுடைய பெண். 6 மாதகாலமாக மாதவிடாய் இரத்தப்போக்கு எனக்கு முன்பு உள்ள காலங்களை விட அதிகளவில் வெளியேறியது பெண் நோயியல் வைத்திய நிபுணரைச் சந்தித்து எனது பிரச்சனையைக் கூறினேன். என்னைப் பரிசோதித்த அவ் வைத்தியர் எனது வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறி எனது வயிற்றை “ஸ்கான்” செய்து பார்த்த போது எனது கர்ப்பப்பையின் சுவர்த்தசையில் ஒரு கட்டி – Fibroid இருப்பதாக கூறினார். எனினும் அது “புற்றுநோய் வகை அல்லாத கட்டி. பயப்பட வேண்டிய […]
யாழ் நகரில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகவும், சமூகப்பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பல் வேறுபட்ட உடல், உள சமூகப் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவது சிறுவர், பெரியோருக்கு இது சம்பந்தமான போதிய அறிவூட்டல் இல்லாமை. பொருளாதார நெருக்கடியால் தாய், தந்தை, உழைக்கச் செல்கின்றமையால் தம் பிள்ளைகள் மீதான கவனமின்மை. பெருகி வரும் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகள். பொருளாதார நெருக்கடிகள். கட்டுப் பாடற்ற தொலைபேசி […]
யாழ் நகரில் அண்மைக் காலமாக மரங்கள் வெட்டப்படும் வீதம் அதிகரித்து வருகின்றது. வீதியகலிப்பு, புதிதாக நடைபெறும் கட்டட வேலைகள் போன்றவற்றாலும், தற்போது நடைபெற்று வரும் புகையிர பாதை அமைப்பு நடவடிக்கையாலும் மக்களுக்கு தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு போதாமையாலும், மற்றும் பல்வேறு காரணங்களாலும் பல பயன்தரு மரங்கள் வெட்டியழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும், தடுப்பற்கும் பல்வேறு மட்டங்களிலும் மரம் நாட்டும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இம் மரம் நாட்டும் நடவடிக்கைகள் இன்னும் […]
இருதயமும் தொழிற்பாடு இதயம் நான்கு அறைகளைக் கொண்ட உடலுக்கும் நுரையீரலுக்கும் குருதியை வழங்குகின்ற பம்பியாகும். மேலே உள்ள வலது மற்றும் இடது சோணை அறைகளைப் பிரிக்கும் சுவர் சோணை அறை பிரிசுவர் எனப்படும். கீழே உள்ள வலது மற்றும் இடது இதய வறைகளைப் பிரிக்கும் சுவர் இதயவறைப் பிரிசவர் எனப்படும். உடல் உறுப்புகளில் இருந்து ஒட்சிசன் (O2) குறைந்த குருதி மேற்பெருநாளம், கீழ் பெருநாளங்களினூடாக வலது சோணை அறையை அடைந்து முக்கூர் வால் பினூடாக வலது இதய […]
குழந்தைப் பருவம் ஆபத்தை அறியாத ஆழமறியாது காலை விட்டு மாட்டிக்கொள்ளும் பருவமாகும் பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. ஒவ்வொருவருடமும் எம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். அதே போல, கிட்டத்தட்ட 27,0000 சிறுவர்கள் வைத்திய சாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாகக் காப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்க வீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களைத் தவிர்த்துவளரும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவைபற்றிய அடிப்படை அறிவு அவசியமாகும். குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் சிறிய […]
“குழலினிது யாழினிது என்பர் தம் மழலைச்சொல் கேளாதவர்” என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கை முளையிலேயே கருவதற்கு யார் காரணம்?? எழுத்தறிவு வீதம் மிகவும் உயர்வாக உள்ள யாழ்மாவட்டத்தில் தவறுதலாக நச்சுப்பதார்த்தங்களை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. சராசரியாக 4 குழந்தைகள் இவ்வாறாக யாழ் வைத்தியசாலைகளில் மாதந்தோறும் அனுமதிக்கப்படுகின்றார்கள். பெற்றோரிடம் அல்லது குழந்தையைப் பராமரிப்பவரிடம் இது பற்றி வினவினால் “சோடா என்று நினைத்து மண்ணெண்ணையைக் குடிச்சிட்டான்”, “ஆச்சிக்கு மனநோய் இருக்கு […]
தேவையான பொருட்கள் சோயாமீற் – 100 கிராம் கோவா – 100 கிராம் கரட் – 100 கிராம் போஞ்சி – 100 கிராம் தக்காளி – 100 கிராம் முருங்கைக்கீரை – 100 கிராம் உப்பு – தேவையான அளவு தேசிப்புளி – 4.மே கரண்டி மிளகு – 1மே. கரண்டி நற்சீரகம் – 1மே. கரண்டி உள்ளி – 1மே. கரண்டி தண்ணீர் – 4 கப் செய்முறை கோவா, கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு, […]
உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள். கட்டுரை தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு, உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். வயதுப்பிரிவு: கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை. மத்திய பிரிவு: தரம் 6 முதல் 10 வரை. மேற்பிரிவு: தரம் 11 க்கு மேற்பட்டோர். சித்திரம் தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு. உள்ளடக்கம் ஆரோக்கியமான வாழ்வின் அவ சியத்தை வலியுறுத்தும் […]