You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2016

சங்க இலக்கியங்கள் முதல் நவயுகப் படைப்புகள் வரை முதுமை என்னும் கருப்பொருளை விட்டுவைக்காத கவிஞர்களே இல்லை எனலாம். “தொந்திசரிய, வயிறே அசைய, நிரைதந்தம் உதிர ஒருகைதடிமேல் வா, இருமல் கிண்கிணென துஞ்சு கிழவன் இவனாரென மகளிர் நகையாடி” என முதுமையின் கோலத்தைச் சந்தத் தமிழில் எடுத்தியம்புகிறார் அருணகிரியார். இந்தப் பாடலில் திருப்புகழார் சொல்லாமற் சொல்லும் உண்மை என்னவெனில் முதுமையை நெருங்கும் போது ஒருவருக்குப் பல உடல் நலசீர்கேடுகள் தானாவே வந்து சேர்ந்து விடுகின்றன என்பதே ஆகும். அதை […]

இடம் – குழந்தை மருத்துவ விடுதி வைத்தியர் – இந்தப்பிரச்சினை கனநாளாய், கிட்டத்தட்ட ஒருவயதில் இருந்து இந்தப் பிள்ளைக்கு இருந்திருக்குது. வளர்ச்சிப் பதிவேட்டிலயும் குறிப்பிடடிருக்கினம். இப்பவரைக்கும் அஞ்சு வயது வரைக்கும் ஏன் அம்மா எந்த வைத்திய ஆலோசனையும் பெற்றுக் கொள்ளவில்லை…? தாய் – ஊர்கிளினிக்கில மிஸ்ஸி சொன்னவா தான்… கொஞ்ச நாள் போகத் தானாகச் சரிவரும் என்று பார்த்துக் கொண்டிருந்தன்… இவனின்ர கிரகமும் மாற வேணும் எண்டுதான்….? பெற்றோர்களின் செயற்பாடுகள், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் சார்ந்தே […]

சமைக்கின்றபோது குறைந்தளவு உப்பையே சேர்ப்போம். உணவுகளில் சுவையை வாசனையை அதிகரிக்க வாசனை ஊட்டும் திரவியங்களையும், மூலிகைகளையும் பயன்படுத்திக் கொள்வோம். சாப்பாடுகளைத் திட்டமிடும்போது உடனடியாக உண்ணக்கூடிய பக்குவம் செய்யப்பட்ட உணவுகளைவிட சோடியம் குறைவாகக் கொண்டுள்ள உடன் புதிய உணவுகளை கருத்தில்கொள்ளுவோம். உப்பிட்ட, தகரத்தில் அடைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உற்பத்திகளைவிட உடன் மீன், கோழி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றில் சோடியம் குறைவாகவுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தெரிவுசெய்யும் போது குறைந்த அல்லது உப்பே இல்லாது தயாரிக்கப்பட்டவற்றையே […]

அனைத்து வகைத் தீக்காயங்களுக்கும்! உடனடியாக நெருப்பை அணையுங்கள், அல்லது தீக்காரணிகளை அந்த நபரிலிருந்து விலக்குங்கள்.(உதாரணமாக சூடானதிரவம், ஆவி, இரசாயனப் பொருள்கள் போன்றன) தீச்சுவாலை இருப்பின் அந்த நபரை நிறுத்தி ( ஒடுவதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்) நிலத்தில் உருட்டி தீயை அணையுங்கள், மேலும் தடிப்பான போர்வையால் சுற்றி அணையுங்கள். மண்ணால் அணைத்தலை தவிர்க்க வேண்டும்) நீர் இருப்பின் நீரினாலும் அணைக்கலாம். உருகக்கூடிய பொருள்கள் உடலில் காணப்படின் அவற்றை விலக்குங்கள் இருக்கமான ஆடைகளை உடனடியாக விலக்குங்கள், ஆடையின் […]

ஒருவருடைய வாழ்நாளில் அவரைப் பல ஆயிரம் கிலோமீற்றர்வரை காவிச் செல்வது அவரது பாதங்களாகும். இவ்வாறு பாதங்கள் எமது உடலைக் காவிச் செல்லும் போது காலில் பல்வேறு சேதங்கள் ( உரசல் காயங்கள், கிழிவுகள், வெடிப்புகள்) ஏற்படுகின்றன. ஒரு வாகனத்தினுடைய அதிர்வு உறுஞ்சிகள் போல் செயற்படுவதும் எமது பாதங்களே. இவ்வாறு மகத்தான சேவை புரிகின்ற எமது பாதங்களுக்கு ஒழுங்கான கவனிப்பும் பராமரிப்பும் இன்றியமையாதவை. ஒரு வாகனத்தைப் பல மைல்களுக்குச் செலுத்திய பின்னர் அதனைக் கழுவித் துடைத்து சுத்தம் செய்து […]

பாட்டியின் வடையைத் திருடிய காகம் இவற்றைத் தூக்க யோசிப்பது ஏன்?

மனி்த வாழ்வில் உணர்வுகள் முக்கியமானவை. பல சமயங்களில் நாம் எமது உணர்வுகளில் வாழ்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணர்வு வெளிப்பாடு மிகவும் முக்கியமானது. இதற்கான பயன் தரவுள்ள படிமுறைகளைச் சிந்திப்போம். உணர்வுகளை இனம் காணுதல் இதுதான் முதற்படி. பல உணர்வுகள் எமக்குப் பழக்கமானவை. மகிழ்ச்சி ஆச்சரியம், பயம், பாலுணர்வு, வெறுப்பு, குற்றவுணர்வு, கோபம், பொறாமை திருப்தி என அவை பல வகைப்படும். இந்த உணர்வுகளுள், எமது தற்போதைய உணர்வு என்ன என்பதற்கான விடை எமக்குத் தெரிந்திருத்தல் நன்று. உணர்வுகளைப் […]

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் என்பது ஔவையின் வாக்கு. இந்த அரிய மானிடப் பிறவியின் ஒரு சாபக் கேடு போதை வஸ்து. போதை வஸ்து என்னும் போது மது மட்டும் தான் போதை வஸ்து என்பதில்லை கஞ்சா, அபின், ஹோரோயின் போன்ற பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. மாற்றம் என்பதை தவிர எல்லாமே மாறும் என்ற கோட்பாட்டிக்கிணங்க முன்னொரு காலத்தில் சொர்க்க பூமியாக விளங்கிய எமது யாழ் […]