You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 17th, 2016

ஆகாரம் தன்னை அளவாக அருந்தியதால் சாகாவரம் பெற்ற சால்புடையோம் – நோகாமல் நீட்டி நிமிர்ந்திருந்து நித்தம் விழுங்கியதால் ஆட்டிப் படைக்குதின்று நோய். நிலங்கொத்தி வயலுழுது நீரிறைத்து நிதமுழைத்து நலஞ்சிறக்க வாழ்ந்தகதை தான் மறந்தோம் – சுலபத்தில் எஞ்சின் பிடித்து அதில் ஏறிநின்று ஏப்பம் விடப் பஞ்சாய்ப் பறக்கும் உயிர். நெல்லுக்குத்தி மாவெடுத்து மருந்தாக்கி நோய்நொடியை மல்லுக்கட்டி நின்ற எங்கள் மாதரெல்லாம் – பொல்லாத சீரியலில் குந்தியவர் சிந்தை தொலைத்ததனால் காரியமே கெட்டதென்று காண். கள்ளத்தீன் தின்றுகள்ளோடு களியுண்டு […]