You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2016
யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக்கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இத்தனை தற்கொலைகள்? யாரில் என்ன தவறுள்ளது? நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் […]
தற்காலத்தில் பலரையும் துன்புறுத்தி வருகின்ற நோய்களில் நீரிழிவுநோயும் ஒன்றாகிவிட்டது. நீரிழிவு ஒரு தொற்றாத நோய் ஆகும். உணவில் அதிகளவான வெல்லம் சேர்த்தல், மாப்பொருள் உணவுகளை உண்ணல், சதை யில் ஏற்படும் நோய்கள், பரம்பரை என்பன இந்த நோய்க்குக் காரணமாகின்றன. இன்சுலின் ஓமோன் குறைபாட்டினால் உருவாகுகின்ற இந்த நோயின் பராமரிப்புமுறையில் செயற்கையாக இன்சுலின் ஓமோனை ஊசிமூலம் ஏற்றுதல் ஒரு பிரதான பங்கு வகிக்கின்றது. இன்சுலின் இன்சுலின் பாவிக்கின்ற நோயாளர்களிடத்தில் இன்சுலினை பாதுகாக்கும் பேணும் முறை. (Storag), பாவனைமுறைகள், பக்கவிளைவுகள் […]
உறுதி மொழி “மதுவினால் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வருகின்றதென்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மதுவில்லாத வாழ்வை நோக்கி அடியெடுத்து வைக்க உறுதி கொண்டு மது அடிமை என்கின்ற இந்தப் பிரச்சினையிலிருந்து பூரணமாக விடுபட்டு எமது சகமனிதர்கள் போல், மனைவி பிள்ளைகள் சுற்றத்தோடு சந்தோஷமாய் வாழவேண்டுமெனத்தீர்மானம் எடுக்கின்றோம். மதுவுக்கு அடிமையாக இருந்தவர்கள் இவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்க முடிந்தால், அது அவர்கள் மீண்டும் ஒருமுறை பிறப்பதற்கு ஒப்பானதாகும். அது மிகவும் சந்தோஷமான ஒரு விடயம். அந்தப் புதிய பிறப்பை அடைய […]
LDதுவை மனப்பூர்வமாகக் கைவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி ஒருவர் காலடி எடுத்து வைத்தாலும், அவர் புதிதாக நடக்கத் தொடங்கும் ஒரு குழந்தையைப் போல, தடக்கி விழவும், வழுக்கி விழவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இது மிகவும் சாதாரணமான, எதிர்பார்க்கக் கூடிய சில பின்னடைவுகளே. இதற்காகக் குடியை விட்டவரோ,அல்லது அவர்தம் குடும்பத்தவரோ மனக்கலக்கம் அடையத் தேவையில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர் அதனை ஒளிக்கத் தேவையில்லை. இவ்வாறு தனது உறுதியான தீர்மானத்தில் இருந்து வழுக்கி விழுந்தவர் இயலுமானளவு விரைவில் தனது […]
ஒருவர் குடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பெரும்பாலும் அவரைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருந்திருப்பார்கள். ஆனாலும் துர திஷ்டவசமாக அவர்களில் பெரும்பான்மை யோர் குடிப்பவர்களாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் குடியை விட்டு விலகி அமைத்துக் கொண்ட புதிய வாழ்க்கை நிலையில் அந்தப் பழைய நண்பர்கள் கூட்டம் பயன்பட மாட்டார்கள். அவர்கள் இப்போதும் குடியைக் கைவிடாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்கள் குடியை விட்டு வாழ விரும்பும் தமது நண்பருக்கு உதவ மாட்டார்கள். மேலும், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் […]
மது பாவிக்கின்ற பலர் குடிப்பதற்கு தங்களது வேலையுடன் தொடர்பான காரணங்களையும் சாட்டாகக் கூறுவதுண்டு. அவர்கள் கடுமையான உடல் வேலை, அலுப்புக் களைப்பு, மன அழுத்தம், ரிலாக்ஸ்” பண்ண வேண்டும் என்ற நினைப்பு வேலை செய்யுமிடத்தில் நடைபெறுகின்ற விருந்துபசாரம் போன்றனவற்றைத் தாங்கள் குடிப்பதனை நியாயப்படுத்தும் காரணங்களாகக் கூறுவதுண்டு. மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், வியாபாரம் சார்ந்து வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுபவர்கள், நகர்ப்புறக் கூலித் தொழிலாளிகள் போனற சில குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் இயல்பாகவே மிக […]
ஒருவருடைய வாழ்க்கையில், அவரது குடும்பம் மிகவும் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றது. மது அடிமை நிலையில் இருந்து விடுபட்டதன் பின்பு ஆரம்பிக்கும் புதிய வாழ்க்கையிலும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மது பாவனையினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் ஒருவரின் மது அடிமை நிலையானது அவரது குடும்பம் என்ற அமைப்பினுடைய அத்திபாரத்தையே ஆட்டம் காண வைக்கும். தந்தை ஒருவரின் மதுபாவனையால் பிள்ளைகளிடத்தே அன்பு, பாசம், மகிழ்ச்சி,சந்தோஷம், எதிர்கால நம்பிக்கை என்பன இல்லாமல் போய்விடும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளிடம் […]
மது அடிமையிலிருந்து விடுபட்டு வெளி வருவது என்பது சவாலான ஒரு காரியம் என்பதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும். மதுவிலிருந்து விடுபட்டாயிற்று என்று இருப்போரிலும் சிலவேளைகளில் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். இவ்வாறு குடிக்கும் எண்ணம், ஆசை வரும் போது எல்லாம் அவர் தான் முன்பு குடிக்கு அடிமையாகவிருந்தபோது இருந்த நிலைமையை எண்ணிப் பார்க்க வேணன் டும். அப்பொழுது ஏற்பட்ட அவமானங்கள், கஸ்டங்கள், துயரங்கள், மரியாதை இழப்புகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்ப்பது நல்லது. சில வேளைகளில் […]