You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2016

மாரடைப்பு என்றால் என்ன? எமது இதயம் சக்தி வாய்ந்த பம்பியாகச் செயற்பட்டு உடல் முழுவதற்கும் குருதியை வழங்குகின்றது. இதயத் தசைக்கு குருதி வழங்கும் முடியுரு நாடிகள் (coronary arteries) ஒட்சியேற்றப்பட்ட குருதியைத் தேவையான அளவு வழங்குவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுகின்றன. இரத்தக் கட்டி அடைத்தல், கொலஸ்ரோல் படிவு, முடியுரு நாடியின் சுவரில் ஏற்படும் சுருக்கம் என்பவற்றால் முடியுரு நாடியில் இரத்தோட்டம் தடைப்படுவதால் முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் தசைப்பகுதியில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் […]

புள்ளி விபரங்களின் படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவ் அதிகரிப்பானது அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையச் செய்கின்றது. 26 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் தற்போது அமேரிக்காவில் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மொத்த சனத்தொகையின் 8.3 வீதமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையானவர்கள் நீரிழிவு நோயின் குணங்குறிகளின்றித் தமக்கு நீரிழிவுநோய் இருப்பதென்று தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மேலும், நீரிழிவு நோய் ஆனது உடலின் எல்லாப் பகுதிகளையும் பாதிப்படையச் […]

குடும்பச் சுமையும் வண்டில் சுமையும் தாங்கும் நிலை இந்த பிஞ்சுக்கு எப்படி வந்தது? உடல், உள, சமூக நன் நிலைய உண்மையான சுகாதாரம் என்று வரைவிலக்கணப்படுத்தும் நாம் இதற்கு என்ன செய்யப்போகிறோம்? சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் குடும்பச்சுமைக்காக வேலையில் ஈடுபடுத்தப்படுவது உங்களுக்கு தெரியவரின் உடன் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான வழிகாட்டலை தர நாங்கள் தயாராக உள்ளோம்.

ஏய் மனிதனே…. என்னை எப்போதும் உன் உதடுகளால் அரவணைக்கும் நண்பனே…. நீ ஒரு உன்னதமான தியாகி – ஏன் தெரியுமா? நீ உன்னைப் பற்றியோ, உன் உயிரைப்பற்றியோ கவலைப்படாதவன் என்னை உருவாக்கும் முதலாளிக்கும் லாபம் கிடைப்பதற்காக உன் உயிரையே துச்சமாக மதித்து வேள்வி நடத்துகிறாய் ஆமாம், உன் வாயிலேயே வேள்வி நடத்துகிறாய் எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டைவைப்பார்கள் ஆனால் உனக்கான கொள்ளியை நீயே வாயில் வைத்திருக்கிறாய், உயிருடன் இருக்கும்போதே…. கரி படிந்து இருக்கும் புகைக்கூடு உன் நுரையீரல் […]

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கருத்தில் எவருக்கும் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியாது. நோய் அல்லது பிணியானது வாழ்க்கையில் உண்டுபண்ணும் தாக்கம் மிகப் பெரியது. உடல் உபாதை, மன உளைச்சல் வீண் பண விரயம், உயிரிழப்பு என இத்தாக்கங்களை எண்ணிக்கொண்டே போகலாம். ஒரு நோயாளியினால் குடும்பத்தில் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அந்நோயாளியைப் பராமரிப்பவருக்கும் ஏற்படும் சிரமங்கள் சொல்லிலடங்காதவை. நோயின் பரிமாணம் காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது. பண்டைய காலத்தில் தொற்றுநோய்களும், சிசு மரணங்களும், மகப்பேற்று கால உயிரிழப்புக்களும் மனித […]

“எத்தனை இறப்புக்களை வைத்தியசாலைகள் கண்டிருக்கும். உயிர் பிரியும் தறுவாயிலும் அதன் பின்னரும் சுற்றி நின்று கதறும் சுற்றத்தினதும் உறவுகளினதும் வேதனையை ஜீரணித்துக் கொள்ள எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதனைச் சொல்கின்றன? இவற்றிலே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இறப்புக்கள் எத்தனை?” சாவுகள் மலிந்து மனங்கள் மரத்துப் போன பூமியிது. ஓர் உயிரின் முடிவிலே எவ்வளவு துயரங்கள்? எத்தனை கனவுகளின் சிதைவுகள்? ஏக்கம், கவலை, கோபம், வெறுப்பு விரக்தி என எத்தனை உணர்வுகளின் கொந்தளிப்புக்கள், பெருகிச் […]

யாழில் நீரிழிவு நோய்க்குள்ளாபவர்களதும் கட்டுப்பாட்டினை இழக்கின்ற நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிதீவிரமாக அதிகரித்து வரும் நிலைமை காணப்படுகின்றது. இந்நிலைக்கான காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு உறவினர்கள் கொண்டுவரும் “சொக்லேட்” என்றே வைத்திசயசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மாதமொன்றிற்கு இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் மூலம் கொண்டு வரப்படும் சொக்லேட் தொன்கணக்குகளில் காணப்படுகிறது. உறவுகளின் மேலுள்ள அன்பு மேலீட்டால் வழங்கும் வெளிநாட்டு “சொக்லேட்டுகள்” தம் உறவுக்கு உடற்பருமன் அதிகரித்தல், நீரிழிவுக்குள்ளாகும் ஆபத்தை ஏற்படுத்தல் கட்டுப்பாடற்ற நீரிழிவை ஏற்படுத்துதல் பற்சூத்தை […]

செய்முறை சுத்தப்படுத்திய பயறு, உழுந்து, கௌபி, சோயா அவரை, பருப்பு, என்பவற்றை வறுத்து குத்தி தோல்நீக்கிய பின் மாவாக்கி தேங்காய்ப்பூ சேர்த்து பக்கற்றில் அடைத்து வைத்து பரிமாறும் போது சுடுநீர் சேர்த்து குழைத்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் பயறு 100 கிராம் உழுந்து 100 கிராம் கௌபி 100 கிராம் சோயா அவரை 100 கிராம் பருப்பு 100 கிராம் தேங்காய்ப்பூ சிறிதளவு (வறுத்தது) இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி விகிதமாலா ஜீவானந்தன்

தேவையான பொருட்கள் வாழைக்காய் – 1 பெரியது மஞ்சள் – 1 சிட்டிகை உப்பு – அளவாக செய்முறை வாழைக்காயை முழுதாக கழுவி எடுத்து பச்சைத் தோலை மட்டும் மெலிதாக சீவி எடுக்கவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு உப்பு, மஞ்சள் அளவாக கரைத்து வைக்க வேண்டும். வாழைக்காயை குறுக்காக வட்டம் வட்டமாக சீவல்களாக வெட்டி உடனேயே மஞ்சள், உப்புத் தண்ணீர் கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். இந்த வாழைக்காய் சீவல்களை ஆவியில் அவித்து […]

தேவையான பொருட்கள் பயறு 500 கிராம் உழுந்து 500 கிராம் பெருஞ்சீரகம் 1 தே. க நற்சீரகம் 1 தே. க செத்தல்மிளகாய் தேவைக்கேற்ப வெள்ளைப்பூடு 10 பல்லு கறிவேப்பிலை தேவைக்கேற்ப மஞ்சள் ¼ தே. கரண்டி மிளகு தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் தேவைக்கேற்ப செய்முறை பயறு, உழுந்து, மிளகு பெருஞ்சீரகம், நற்சீரகம் என்பவற்றை அரைத்து மாவாக்கவும். செத்தல் மிளகாயையும் இடித்து எடுக்கவும். உப்பு மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வெள்ளைப்பூடு இடித்து, மாவுடன் சேர்த்து ஒன்றாக குழைத்து […]