You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January 16th, 2016

அன்றைக்கு நாம் வாழ்ந்த நலமான வாழ்விழந்தோம் இன்றைக்கு நாட்டிலே எங்கு திரும்பிடினும் புற்றுநோய்!, எங்கிருந்து புதிதாக முளைத்ததிது? மற்றுச் சில உணவுகளில் மரணத்தைத் தேடுகிறோம். தகரத்தில் அடைத்ததுவும் பிளாஸ்ரிக்கில் நிரப்பியதும் நிகரற்ற பொருள் என்று நீட்டி முழக்குகிறோம்! நகரத்து வாழ்க்கைக்கு நாளாந்தம் பழகியதால் நுகரும் பொருளிலெல்லாம் நோய் சேர்த்தே வாங்குகிறோம். உரம் தெளித்துப் பளபளப்பாய் மினுங்கும் மரக்கறிகள் மரத்தோடு சேர்த்து வைத்து மருந்தடித்த மாங்கனிகள் நிறத்தால் நமைக் கவரும் வாழைப்பழக் குலைகள் திறமென்று வாங்குகிறோம் தீயதெல்லாம் தேடுகிறோம். […]