You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2016
ஒருவர் படிப்படியாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தனது வாழ்க் கையில் பல்வேறு பருவங்களைக் கடந்து செல்வதனைக் காணலாம். ஆரம்பப்பருவம் இந்தப் பருவத்திலே ஒருவர் போதையில் உள்ள நாட்டம் காரணமாக, தனக்கு விரும்பிய அளவு போதை ஏற்படுகின்ற வரையில் குடிப்பார்கள். காலஞ் செல்லச்செல்ல, ஒரேயளவின தான போதை ஏற்படுவதற்கு முன்பு குடித்ததைவிட அதிகளவில் குடிக்கவேண்டிய தேவை ஏற்படும். மிக அதிகளவில் குடிப்பவர்கள் சிலரில் மது உள்ளெடுத்த நிலையில் நடந்த சம்பவங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது கஷ்டமாக […]
மதுப் பழக்கத்தினை உடைய ஒருவர். அவருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தற்பொழுது மதுவிலே தங்கிநிற்கும் ஒரு நிலைக்குவந்திருக்கலாம். இந்த நிலையையே மதுவுக்கு அடிமையாகிப்போன ஒரு நிலை என அழைக்கின்றோம். மதுவுக்கு அடிமையாகிப் போனவர்கள் தமது வழமையான விருப்பு வெறுப்புகள் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு மதுவுடன் தொடர்புடைய வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டுவார்கள். ஒருவரில் கடந்த ஒரு வருட காலத்தில் கீழ்வரும் இயல்புகளில் மூன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும் எனில் அவர் மதுவுக்கு அடிமையாயிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். மதுவின் […]
மண் வீட்டில் வாழ்ந்தாதலும் மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் – இப்போ முன்வீட்டில் சலரோகம் முடக்கில் கொலஸ்ரோலாம்! பின்வீட்டில் பிறஷர், பக்கத்தில் பக்கவாதம் என்வீட்டில் என்ன வரும் நானறியேன் கண்டதையும் தின்றுவிட்டுக் கதையளந்து திரிந்ததனால் உண்டதை உளைத்து உரமாக்க மறந்ததனால் குண்டரெண்டுஆகிக் கூனாகிக் குறையாகிக் கிண்டலுக்கு ஆளாகும் கீழ் நிலமை வந்ததெப்போ? நாற்பதுகள் தாண்டியபின் நாட்டுக்குள் வந்த ஒன்று (ch) சீப்பாக வந்து எம்மை சீரழித்த கோதுமை மா! மூப்புவென்ற நம் வாழ்வின் முதுகெலும்பை முடக்கியது ஆப்பாக வந்து எங்கள் […]
மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்துப் பல லட்சக் கணக்கான மக்கள் இறப் பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு. அவையாவன, எயிட்ஸ் மற்றும் புற்றுநோயாகும். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக் கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பயனாகப் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள புதியமுறைகள் முன்னேற்றங்களால் […]
உலக அளவில் ஆண்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் வழுக்கைத்தலை மிக முக்கிய ஒன்றாக விளங்குகின்றது. வழுக்கையைத் தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவைச் சிகிச்சை முறை என்று பலவகை மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை நிரந்தரத் தீர்வைத் தரவில்லை என்றே பார்க்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில் மனிதர்களின் முடியை செயற்கையாக […]
மனிதன் உயிர்வாழ்வதற்கும் உயர்வு பெறுவதற்கும் மனித நேயமிக்க உயர் பண்புகளுடன் வாழ்வதற்கும் தலையாய துணை போவது அவன் உட்கொள்ளும் உணவு. இதைப் பண்டைக் காலத்து ஞானிகள் தவமுனிவர்கள், அறிஞர்கள் முதல் இன்றைய நவீன விஞ்ஞானிகள் வைத்தியர்கள் வரை அறிந்துள்ளார்கள். “அன்னப் பிரம்மம்” அன்னம் என்பது உணவு பிரம்மம் என்பது இறைவன் எனவே உணவு தெய்வீகமானது. “அன்னம் ந நிந்த்யாத்” “உணவை இகழாதே’ இவை எல்லாம் தேவ வாக்குகள். எனவே இன்றும் நாங்கள் நல் வாழ்வு வாழ்வதற்கு உணவு […]
தற்போது யாழ் குடாநாட்டின் ஏனைய பிராந்திய வைத்தியசாலைகளும் போதிய வைத்திய வசதிகளைக் கொண்டிருந்தும் அநேகமான நோயாளர்கள் தமது சிறிய சிறிய மருத்துவப் பிரச்சினைகளுக்குக் கூட யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவதையே பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் அநாவசியமான நேரத்தைச் செலவு செய்வதுடன் போக்குவரத்துக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் தமது பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள அரசாங்க வைத்தியசாலையில் தமக்கு வேண்டிய அதி உச்ச மருத்துவப் பயன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சியெடுப்பது நல்லது. […]
யாழ் குடாநாட்டில் முதுமை மூளை நோய் வேகமாக அதிகரித்துவருகின்றது. அண்மைக்காலமாக யாழ் நகரில் “டிமென்சியா” (முதுமையில் ஏற்படும் ஒரு வகை மறதியுடன் கூடிய மூளை அழற்சி) எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். மற்றைய பகுதிகளை விட யாழ் நகரில் ஒப்பீட்டளவில் முதியவர்களின் விகிதாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது. அடுத்து வாழும் வயதெல்லை அதிகரித்து வருவது இதற்கு ஒரு காரணம் ஆகும். உறவினர்கள், குடும்பங்கள் பிற நாட்டில் […]
அன்றைக்கு நாம் வாழ்ந்த நலமான வாழ்விழந்தோம் இன்றைக்கு நாட்டிலே எங்கு திரும்பிடினும் புற்றுநோய்!, எங்கிருந்து புதிதாக முளைத்ததிது? மற்றுச் சில உணவுகளில் மரணத்தைத் தேடுகிறோம். தகரத்தில் அடைத்ததுவும் பிளாஸ்ரிக்கில் நிரப்பியதும் நிகரற்ற பொருள் என்று நீட்டி முழக்குகிறோம்! நகரத்து வாழ்க்கைக்கு நாளாந்தம் பழகியதால் நுகரும் பொருளிலெல்லாம் நோய் சேர்த்தே வாங்குகிறோம். உரம் தெளித்துப் பளபளப்பாய் மினுங்கும் மரக்கறிகள் மரத்தோடு சேர்த்து வைத்து மருந்தடித்த மாங்கனிகள் நிறத்தால் நமைக் கவரும் வாழைப்பழக் குலைகள் திறமென்று வாங்குகிறோம் தீயதெல்லாம் தேடுகிறோம். […]