You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2015

யாழ். போதனா வைத்தியசாலையை நாடும் நோயாளர் பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் தேவைகளை உரிய முறையிலும் உடனடியாகவும் தாமதமின்றிப் பெற்றுக்கொண்டு, எதுவித விரயமுமின்றி வினைத்திறனுடன் செயற்பட்டுச் செல்லப் பின்வரும் பிரிவுகளில் எவ்விதம் செயற்பட வேண்டும் எனும் வழிமுறைகளை வரிசைப்படுத்துகின்றேன். இந்த வழிகளைப் பின்பற்றிப் பதிவுகளையும் பத்திரங்களையும், மேலும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு- இறப்புப் பதிவுகள் ஒரு மனிதனின் பிறப்புக்கும் வாழ்வுக்கும் அவனின் மரணத்துக்கும் இந்தப் பத்திரங்கள் மிகமிக முக்கியமானவை, இன்றியமையாதவை. அவனின் (வாழ்வுக்கும்) வாழ்க்கைத் தேவைகளுக்கும் மரணத்தின்பின் அவனின் […]

மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. சூழல் காரணிகளால் ஏற்படுவது. இதன்போது உடலுக்குத் தேவையான சக்தித் தொகுப்பு கூட்டப்படுகின்றது. இது உடற்றொழிலியல் எல்லையைத் தாண்டும்போது நோய்க்காரணியாக அமைகின்றது. இதன்போது மூளையானது மன உளைச்சலிற்கான சில ஹோர்மோன்களை விடுவிப்பதன்மூலம் உடலின் சக்தித் தொகுப்பு அதிகரிக்கப்படுவதன் விளைவாகக் குருதிக் குளுக்கோஸ், இதயத்துடிப்பு வீதம், குருதியமுக்கம், தசைத் தொழிற்பாடு என்பன அதிகரிக்கப்படுகின்றன. இதனால் உயர்குருதியமுக்கம், சலரோகம், அல்சர் போன்ற நோய்த் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. இதன் அறிகுறிகளாக தலையிடி, வயிற்றுக் கோளாறு, […]

இந்தப் பூவுலகில் வாழும் ஒவ்வோர் உயிருக்கும் தொடக்கம். முடிவு ஆகிய இரு செயற்பாடுகளும் உண்டு. அந்தவகையில் மனிதன் என்ற உயிரியும் அதற்கு விதிவிலக்கல்ல. கருவறையில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம் கல்லறை வரைக்கும் தொடர் கதையாகத் தொடர்கின்றது. கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் பலவகையான கற்றல்கள் ஊடாக இன்பம், துன்பம் இரண்டையும் ப(ா)ல் வேறுபட்ட விகிதாசார அளவுகளில் அனுபவிக்கின்றான். மனிதனது வாழ்க்கையானது பல படிநிலைகளைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பல வகையான வளர்ச்சிப் படிகளைக் கொண்டுள்ளான். […]

யாழ். போதனா வைத்தியசாலையின் பார்வையாளர் நேரம். புயல்போலப் பார்வையாளர்கள் புகுந்துவிடுகிறார்கள். பொத்தி வைத்திருக்கின்ற அவர்களின் பொறுமையெல்லாம் வைத்தியசாலை வளைவுகளில் ஏனோ பீறிட்டுப் பாய்கின்றது. எதைப் பற்றிக் கூறுகிறோம் என்பது இன்னும் தெளிவாகவில்லையா? ஆம் நமது மக்கள் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வாசிப்பதுடன் விட்டு விடுகிறார்கள். பலர் வாசிக்காமலேயே போய்விடுகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதையெங்கும் வலது பக்கமாகப் போகவும் எனத் தெளிவாக எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் தேர்த்திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்பவர்கள்போல முண்டியடித்து முன்னேறுகிறார்கள். சிலர் பல நாள் […]

உருளைக்கிழங்கை விரும்பி உண்ணாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். சுவையில் மட்டுமல்ல போசணையிலும் உருளைக்கிழங்கு சிறந்த உணவாகும். நீரிழிவு மற்றும் இருதய நோய் உடையவர்களும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோரும் உருளைக் கிழங்கு ஒரு எட்டாக்கனியாக இருப்பதாக எண்ணி வருந்தத் தேவையில்லை. நீங்களும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். எவ்வாறு? எமது பிரதேசத்தின் பிரதான உணவான அரிசியைச் சோறாகவும், அதன் மாவினைப் பிட்டு, இடியப்பமாக ஆக்கியும் நாம் உண்கிறோம். அரிசியிலுள்ள பிரதான உணவுக்கூறு காபோவைத ரேற்று. உருளைக்கிழங்கிலுள்ள பிரதான […]

இன்றைய நவீன யுகத்தில் விஞ்ஞானம், மருத்துவத்துறையில் எவ்வளவு சாதனைகளை எட்டிய நிலையில் மனிதன் விணே விபத்துக்களில் சிக்கித் தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை. எனினும் பெரும்பாலான விபத்துக்கள் மனிதனின் அவசரத்தாலும், போட்டியாலுந்தான் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களால் அங்கவீனம் அடைவதுடன் சிலர் மரணத்தையும் தழுவுகின்றனர். பெரும்பாலான வீதி விபத்துக்கள் அதிகூடிய வேகத்தில் வாகனம் செலுத்துவதாலும், மது போதையில் வாகனம் செலுத்து வதாலும் ஏற்படுகின்றன என்பது வைத்தியசாலைப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. […]

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினால் 20.11.2015 அன்று உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டில் பாடசாலைகள் பொது அமைப்புக்களுக்கு செவ்விளநீர் கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. பொது மக்களிடையே சோடா, மென்பானங்கள் போன்றவற்றின் பாவனையை குறைத்து இயற்கையான உற்பத்திகளை உபயோகிக்க வைக்கும் முகமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.