You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December 11th, 2015

யாழ். போதனா வைத்தியசாலையின் பார்வையாளர் நேரம். புயல்போலப் பார்வையாளர்கள் புகுந்துவிடுகிறார்கள். பொத்தி வைத்திருக்கின்ற அவர்களின் பொறுமையெல்லாம் வைத்தியசாலை வளைவுகளில் ஏனோ பீறிட்டுப் பாய்கின்றது. எதைப் பற்றிக் கூறுகிறோம் என்பது இன்னும் தெளிவாகவில்லையா? ஆம் நமது மக்கள் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் வாசிப்பதுடன் விட்டு விடுகிறார்கள். பலர் வாசிக்காமலேயே போய்விடுகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதையெங்கும் வலது பக்கமாகப் போகவும் எனத் தெளிவாக எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் தேர்த்திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்பவர்கள்போல முண்டியடித்து முன்னேறுகிறார்கள். சிலர் பல நாள் […]