You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for November, 2015
ஒருகாலத்தில் நம் நாட்டில் தொற்றுநோயால் இறக்கும் மக்களின் தொகை அதிகமாக காணப்பட்டது. வகை, தொகை இன்றிய இவ் இறப்புகள் அந்நேரத்தில் எம்மக்களின் அடிவயிற்றில் புளியை கரைத்தன. நிர்ப்பீடனஊசி (Vaccination) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்நிலை, இன்றில்லை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தோம். ஆனால் இன்று மீண்டும் அவ்வாறான அபாயநிலை – அவலநிலை ஒன்று தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதனை பல மருத்துவர்களும் சமூகவியலாளர்களும் சுட்டிக்காட்டுவதுடன் எம்மாலும் உணரக்கூடியதாக உள்ளது. ஆம் எம் சமூகத்தின் மீது இருள் மேகங்கள் கவிழத் தொடங்கியுள்ளன. […]
குழந்தைப்பருவம் ஆபத்தை அறியாதது. ஆழமறியாது காலை விட்டுமாட்டிக்கொள்ளும் பருவம். பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால்,விபத்துக்களில் சிக்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைத விர்க்க முடியாததே. ஓவ்வொரு வருடமும் நம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். கிட்டத்தட்ட 270000 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாககாப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்கவீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களை தவிர்த்து வளரும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதானால், விபத்துக்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் நிகழலாம் என்பது பற்றி அடிப்படை அறிவு அவசியமாகும். அதுபற்றி இனிப்பார்ப்போம். குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் […]
நீரிழிவு உயர் குருதியமுக்கம் மற்றும் கொலஸ்திரோல் அளவு கூடுதலாகக் காணப்படுதல் என்பன எமது சமுதாயத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன. உணவு முறைகளில் ஏற்படும் மாற்றமானது பொது மக்களின் ஆரோக்கியத்தில் பிரதானமான பங்கை வகிக்கிறது. இலங்கை மக்களிடையே ஆரோக்கிய மான உணவுமுறைகளை ஊக்குவிப்பதில் இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்கள் கல்லூரியின் பிரிவான நீரிழிவு அற்ற இலங்கை (DIBETES SRI LANKA) உதவி வருகின்றது. இந்த அமைப்பானது எமது கலாசாரத்துக்கமைவான, சுவையான மற்றும் இலகுவாகத் தயாரிக்கக்கூடிய உணவுவகைகள் பற்றி பொது மக்களை […]
இன்றைய வாழ்வில் நாம் செல்வத்துக்கும். செல்வம் தேடுவதற்குமே முன்னுரிமை அளிக்கின்றோம். எமது செயற்பாடுகளும் அதுசார்ந்ததாகவே இருக்கின்றன. பொருள் தேடுவதற்காக புலம்பெயர்ந்த கதைகள் பலவற்றையும் எமது வரலாற்றில் படித்திருக்கின்றோம். ஆனாலும் உண்மைச் செல்வம் எதுவென்று கண்டுகொண் டோமா? மடிக்கணினிகள் பல இருப்பதா? மகிழுந்துகள் பல இருப்பதா? மாடி மனைகள் பல இருப்பதா? மடி நிறையப் பணமிருப்பதா? எது தான் செல்வம்? உண் மைச்செல்வம் எது வென்றுமறந்தேவிட்டது. ஆரோக்கியமனமோ. ஆரோக்கிய உடலோ, ஆரோக்கிய நடத்தையோ உண்மைச் செல்வம் என்றால் அதை […]
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும்கூட சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாவன: மருந்துகளின் அவசியத்தை உணராமை நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் கவனயீனமாக இருத்தல். மருந்து பாவிக்கும் முறை பற்றியும், அதன் அவசியம் […]
தினந்தோறும் பாதங்களைக் காரத்தன்மை குறைந்த சவர்க் காரத்தைப் பயன்படுத்தி நன்றாகக் கழுவவும். பின்னர் மென்மையான துவாயினால்துடைக்கவும். துடைக்கும்போது விசேடமாகப் பெருவிரல் பகுதி விரல் இடைவெளிகளில் கவனம் செலுத்தவும் பாதங்களை உலர்வான நிலையில் பேணவும். ஆயினும் அதிகம் உலர்வான நிலை காணப்படுமாயின் வெடிப்புக்கள் ஏற்பட்டு பற்றிரியாக்கள் பரவலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிக உலர்தலைத் தடுக்க டanolin or Waseline பாவிக்கவும். களிம்புகள் படுக்கை விரிப்பில் படுவதைத் தடுப்பதற்காகப் பழைய காலுறையை அணிந்து கொள்ளவும். இயல்பாகவே கால்களில் அதிக வியர்வை […]
எமது உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் முடி காணப்படுகின்றது. எமது உடலின் வெளித்தோலில் மயிர்ப்புடைப்புக் கலங்கள் காணப்படுகின்றன. இக்கலங்கள் மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படும்போது பழைய கலங்கள் முடிகளாக வெளித்தள்ளப்படும். கெரற்றின் கொண்ட முடிகளாக உடலிற் காணப்படும். எமது தலையில் 100 000 – 150 000 வரையான முடிகள் உண்டு. இவற்றில் 100 வரையான முடிகள் நாளாந்தம் இறந்துவிடுகின்றன. நாளாந்தம் வளர்ச்சியடையும் முடிகள் 1 வருடத்தில் 15cm வரை வளரக் […]
நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். அக்கட்டுப்பாடு இழக்கப்படுமிடத்து பாதிப்புகள் அதிகம் ஏற்படும். 1. குருதிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு அதற்குரிய எரிபொருள் விநியோகம் சரியான முறையில் இருக்க வேண்டும். அதேபோன்று எமது கால்களும் சரியாக இயங்க அதற்குரிய குருதி விநியோகம் சிறப்பாக அமைதல் வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் நாள்பட்ட நிலைமையில் அவர்களது நாடிகளில் கொழுப்பு படிவங்கள் ஏற்படும். அந்த நாட்களில் உட்பகுதி தடிப்படைந்து குருதி விநியோகிக்கும் அளவு குறைவடைகின்றது. குருதி […]
இன்றைய நவீன நாகரிக உலகில் வாழும் நாம் உடற்பயிற்சியின் தேவையை அத்தியாவசியமாக உணர வேண்டிய காலம் வந்துள்ளது. இன்று நம்மில் பெரும்பாலானோர் ஒரு கதிரையில் இருந்து கொண்டே பல வேலைகளை பல சாதனைகளை கணினிகள் இலத்திரனியல், மின் இயந்திர சாதனங்கள் மூலம் இலகுவாக முடிக்கின்றனர். இதனால் வேகமாக உழைப்பிற்காக சுழன்று கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் வேறொரு வழியில் மனிதனின் உடல் தொழிலியலைப் பாதித்துக் கொண்டிருப்பதை எம்மால் உணர முடிவதில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து பல மணிநேரம் […]
இன்று உலக அரங்கில் வருடாந்தம் 60 லட்சம் மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டு பலகோடிக் கணக்கான மக்களை நோயாளிகள் ஆக்குகின்ற புகையிலையின் பிறப்பிடம் அமெரிக்கா 15ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் குளிர் பனி போன்ற விசேட காலங்களில் பாவித்துவந்தனர். இதனை புதிய உலகைக் கண்டு பிடிக்கப்புறப்பட்ட கொலம்பளம், மாலுமிகளும் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அவதானித்ததாக வரலாறு கூறுகிறது. பின்பு அங்கிருந்து ஸ்பெயின் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, […]