You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2015

செய்முறை பயறை முளைக்க விடவும் ( நனைத்து) உழுத்தம் பருப்பு, கௌபி, என்பவற்றை ஊற விட்டு கழுவு கிரைண்டரில் அரைக்கவும். பயறையும் அரைக்கவும், முட்டையை நன்கு அடிக்கவும். அப்பச்சோடாவையும் சேர்த்து அடிக்கவும். அரைத்த தானியம் முட்டைக்கலவை இரண்டையும் சேர்த்து கலந்து நான்கு மணிநேரம் வைக்கவும் (புளிப்பதற்கு) வெங்காயம், மிளகாய் தாளித்து கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மாக்கலவைக்குள் தானியம், உப்பு. மிளகு, சீரகத்துடன், யாவும் சேர்த்து கலந்து இட்லிச்சட்டியில் ஊற்றி அவிக்கவும். தேவையான பொருட்கள் பயறு […]

செய்முறை மீன், இறால் என்பவற்றை சுத்தம் செய்து அவிக்கவும், அவிந்ததும் மசிக்கவும், மரக்கறி வகையை துருவலாக வெட்டவும், மசித்து வைத்த மீன், இறால் என்பவற்றுடன் வெட்டிய மரக்கறி இலைவகையைச் சேர்த்துக் கிளறி தேவையானளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள், என்பவற்றையும் சேர்த்து பரிமாறவும். தேவையான பொருட்கள் மீன் 250 கிராம் இறால் 250 கிராம் கரட் 50 கிராம் கோவா 50 கிராம் வெள்ளரிப்பிஞ்சு 50 கிராம் சிறிகுறிஞ்சா இலை சிறிதளவு பாகற்காய் சிறிதளவு உப்பு தேவையானளவு மஞ்சள்தூள் […]

செய்முறை ரின்மீனை சுத்தம் செய்து சிறிய பாத்திரத்தில் இட்டு மசிக்கவும். மரக்கறியை சிறியதுண்டுகளாக வெட்டவும், கரட்டை சீவவும். வெங்காயம், மிளகாய் சிறியதாக நறுக்கவும், உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும், பின்பு ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். அதனுள் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம்பழச்சாறு அல்லது தயிர், கறிவேப்பிலை சேர்த்து கையால் மசித்து பிசைநை்து கலக்கவும். பின்பு பரிமாறவும். தேவையான பொருட்கள் கரட் 1 பச்சை மிளகாய் 5 வெங்காயம் 10 ரின் மீன் 1 கறிமிளகாய் 2 தக்காளி […]

செய்முறை உருழைக்கிழங்கையும் இறைச்சியையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு உருளைக்கிழங்கையும், இறைச்சியையும் போட்டு அவிக்கவும். பின்னர் வெட்டிய போஞ்சி, கரட், பெரிய வெங்காயம், பூடு என்பவற்றை Anchor பாலில் போட்டு அரைப்பதத்தில் அவித்து எடுக்கவும். அவித்த உருளைக்கிழங்கு, இறைச்சி என்பவற்றுடன் இதனையும் சேர்த்து மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்துக் கிளறவும். தேவையான பொருட்கள் கோழியிறைச்சி – 200 கிராம் போஞ்சி – 150 கிராம் உருளைக்கிழங்கு – 200 கிராம் பெரிய […]

செய்முறை கொள்ளை, உப்பு, போட்டு அவித்து எடுத்து வைக்கவும். தாச்சியில் எண்ணெய் விட்டு, கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, செத்தல் மிளகாய் இஞ்சி துருவல், பெருங்காயத்தூள், சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அவித்த கொள்ளு, தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும். தேவையான பொருட்கள் கெள்ளு 1கப் செத்தல் மிளகாய் 2 கடுகு ½மே.க சீரகம் ½மே.க உளுத்தம்பருப்பு ½மே.க இஞ்சி துருவல் 1 மே.க கறிவேப்பிலை தேவையானளவு தேங்காய்ப்பூ சிறிதளவு உப்பு […]

செய்முறை பயறை அவித்து பின்னர் அதனை இறக்கிவிட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை சிறு சிறு துண்டுகளாக்கி அதனுள் மிளகு, சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் என்பவற்றுடன் சிறிதளவு தூளும் இட்டு நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும் பின் அதற்குள் அவித்த பயற்றினை இட்டு நன்றாக பிரட்ட வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக அதனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் பின் பயற்றம் மாவினை தண்ணீர் விட்டு குழைத்து பின்னர் பிடிக்கப்பட்ட உருண்டைகளை அதனுள் தோய்த்து இறுதியாக […]

செய்முறை வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை சிறுசிறுதுண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணியைக் கழுவி, விதைகளை நீக்கி விட்டு அதனையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மாதுளம்பழங்களை சுத்தம் செய்து அவற்றையும் இதனுடன் சேர்த்தல், பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூளைத் தூவி கிளறி விட வேண்டும். பின் கொத்தமல்லி இலையைத் தூவி சாப்பிடவும். தேவையான பொருட்கள் தர்பூசணி 500 கிராம் வெள்ளரிக்காய் 250 கிராம் தக்காளி […]

செய்முறை கரட், மிளகாய்,வெங்காயம் என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். உளுத்தம்மாவுடன் இவற்றைச் சேர்த்து முளை விட்ட வெந்தயம், மல்லி, பயறு, தேங்காய்ப்பூ என்பவற்றை சேர்த்து குழைக்கவும். உப்பு தேவையானளவு சேர்க்கலாம். ரொட்டி பதத்திற்கு குழைத்து ரொட்டி போல் தட்டி தோசைக்கல்லில் சூடாக்கி வெந்ததும் மறுபக்கம் திருப்பி எடுக்கவும். தேவையான பொருட்கள் உளுத்தம்மா 100 கிராம் பயறு 25 கிராம் கரட் 25 கிராம் வெந்தயம் (முளை) 25 கிராம் வெங்காயம் 25 கிராம் மல்லி (முளை) 25 […]

செய்முறை பச்சைப்பயறை ஊறவைத்து அரைத்து அதற்குள் சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், முருங்கையிலை, சண்டியிலை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ என்பவற்றைச் சேர்த்துக் கலக்கிய பின் இவற்றுடன் உப்பு, சீரகம், உழுத்தம்மா சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு பின்னர் மெலிதான வடைகளைத் தட்டி மிதமான சூட்டில் உள்ள தோசைக்கல்லில் 2 துளி நல்லெண்ணை இட்டு இரண்டு பக்கமும் வாட்டி எடுக்கவும். தேவையான பொருட்கள் பச்சைப்பயறு 200g முருங்கை இலை 100g சண்டியிலை 100g வெங்காயம் தேவையான அளவு […]

புரத அடை செய்முறை உழுந்து, கௌபி என்பவற்றை சுத்தமாக்கி திரித்து மாவாக்கவும். மாவுடன் உப்பு, சிறிதளவு தேங்காய்ப்பூ என்பன சேர்த்து குழைக்கவும். பின்பு ரொட்டி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு சுடவும். தேவையான பொருட்கள் உழுந்து 250 கிராம் கௌப்பி 250 கிராம் உப்பு சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு அம்பிறலா சட்னி தேவையான பொருட்கள் அம்பிறலங்காய் 5 சிறிய வெங்காயம் 10 மிளகாய்த்தூள் 1.மே.க மஞ்சள் தூள் சிறிதளவு ஏலக்காய் 3 அங்கர் பால் 1 கப் […]