You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October 1st, 2015

ஒரு பெண்ணின் மாதவிலக்கு சாதாரணமாக 45 – 55 வயதிற்கிடையில் நிரந்தரமாக நின்றுகொள்ளும். மாதவிலக்கு ஓயும்போது என்ன நேர்கின்றது. மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது ஒரு பெண்ணின் ஜனன உற்பத்தி உறுப்புக்களில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பாலியல் ஓமோன் திரவம் உண்டாவதும் சூல் வெளிப்படுதலும் படிப்படியாக குறைந்துகொண்டு போகும். இதனால் மாதவிலக்கு வட்டத்தில் ஒழுங்கின்மை ஏற்படலாம். ஓமோன் திரவம் குறைவடைந்ததும் நிரந்தரமாக மாதவிலக்கு ஏற்படுதலும் நின்றுவிடும். மாதவிலக்கு நிற்கும் காலம் நெருங்கும்போது மாதவிலக்குடன் இரத்தப்போக்கு அதிகமாக அல்லது […]