You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September, 2015

செய்முறை முட்டையை நன்கு அடிக்கவும். பால், அடித்த முட்டை, றஸ்க் தூள் என்பவற்றை நன்கு கலக்கவும். கடைசியில் 1 தே.கரண்டி இனிப்பூட்டி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் கலவையை ஊற்றி அதன் வாய்ப் பகுதியை ஈயக்கடதாசியால் மூடிக் கட்டவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அப் பாத்திரத்தில் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து அவித்து எடுக்கவும். தேவையான பொருட்கள் பசுப்பால் 200ml முட்டை 1 றஸ்க்தூள் சிறிதளவு செர்ரிப்பழம் சிறிதளவு இனிப்பூட்டி தேவையானளவு இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.சிவானந்தராணி […]

இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உரவகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனையை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் கடந்த 20 ஆண்டுகளாக சில பிரதேசங்களில் மர்மமாக இருந்துவரும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாயஇரசாயனப் பொருள்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதி செய்வதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக நோய்களிலும் வித்தியாசமான காரணங் களால் சிறுநீராக நோய்க்கு உள்ளான […]

செய்முறை முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் இடவும். கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு சிறிய துண்டங்களாக ஆக்கி நீர் விட்டு அவிக்கவும். வெட்டிய உள்ளி, வெங்காயம் பச்சை மிளாகாய், இஞ்சி, பூண்டு விழுது, மற்றும் அவித்த மரக்கறி, கறிவேப்பிலை உப்பு அனைத்தயையும் ஒரு பாத்திரத்தில் இடவும், முட்டையை நன்கு அடித்த பின் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி அதனுள் கறிவேப்பளை போடவும். பின்பு தோசைத்தட்டில் எண்ணெய் பூசி இக்கலவையை இடவும். ஓரமாக எண்ணெய் விட்டு வேகிய பின்பு திருப்பிப் […]

அருகிப் போன நமது பாரம்பரிய உணவு முறைகளை மீட்டிப்பார்க்கிறது இந்தக் கவிதை. நெல்லரிசி, வரகரிசி, சாமை, தினை, குரக்கன் என்று பல்வேறு தானியங்கள் பக்குவமாய் பயிரிட்டு பொல்லா நோய் அத்தனையும் பொசுக்கியது அக்காலம் நாட்டுக்கோழி வறுத்து நற்சீரகம் சேர்த்து கூட்டிக் குழம்பாக்கி குடும்பமாய் உட்கார்ந்து பாட்டி வைத்தியத்தில் பசிதணித்ததக்காலம் அரிசிமா சேர்த்து அதில் அளவாய்த்தேன் விட்டு சரியாக நீர் சேர்த்து எங்கள் அம்மா களிக்கிண்ட வரிசையாய் நின்று அதை ருசித்ததுவும் அக்காலம் தினை அரிசிச் சோறும் கேள்வரகுக் […]

உலகமயமாதலின் ஊடாக மனித வாழ்க்கையில் பல்வேறுவகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மருத்துவத்துறையின் வளர்ச்சிப்போக்கு பிரமிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருக்கின்ற அதேநேரம், உலகையே உலுக்கும் அளவிற்கு நோய்களின் தோற்றமும் வளர்ச்சியும், உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டே இருக்கின்றன. இந்த வகையில் மனித வாழ்க்கை முறையில் தவறான நடத்தைகளின் விளைவு மற்றும், சமநிலையற்ற சுகாதார பழக்க வழக்கங்களினால் மனித வாழ்வை நிர்க்கத்திக்கு உள்ளாக்குகின்ற நோய்களில் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது. பாரிசவாதம் (Stroke) மனித மூளைக்கான இரத்தத்தையும், ஒட்சிசனையும் […]

சலரோகம் (Diabetes mellitus) இன்று எமது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்தவர்களில் 10 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் இந்நோயினால் பாதிக்கப்படுள்ளார்கள். வருங்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். சலரோகமானது முறையாகச்சிகிச்சை பெறப்படாது விட்டால் உடலிலுள்ள எல்லா உறுப்புக்களையும் பாதிக்கக்கூடியது. கண்கள், மூளை, இருதயம், ஈரல், சிறுநீரகங்கள், பாதங்கள் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. சலரோகத்தினால் பாதங்களில் ஏற்படுமு் பாதிப்புக்களானவை பாரதூரமானவை. இதனால் சத்திரசிகிச்சை மூலம் கால்களை அகற்றவேண்டி ஏற்படலாம் (Amputatron) விபத்துக்களால் அல்லாத Amputatron இதற்கான […]

ஒருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாய்த் தெரிவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைநேர மற்றும் உடல்நலத் தரவுகளை ஆராயும்போது வாரத்திற்கு ஐம்பத்து ஐந்து மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு, வாரத்துக்கு நாற்பது மணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து மூன்று […]

செய்முறை பயறு லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும் ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த உழுந்துடக் சேர்த்து தயிர் விட்டு நன்கு பிசையவும் உப்பு அளவுக்கு சேர்க்கவும். பச்சை மிளகாய் தூளாக வெட்டி, இஞ்சி தூளாக வெட்டி சேர்க்கவும். செத்தல் மிளகாய் சிறிதாக வெட்டி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும் எல்லாவற்றையும் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும். ( பாக்கு அளவு உருண்டை) அதை ஆவியில் (Steam) […]

இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனினும் தொடர்ந்து உணவு விடயத்தில் நீண்டநாள் பிளாஸ்ரிக் பொருள்களின் உபயோகம் ஆபத்தானது. அத்துடன் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுகமாக பல்கி பெருகிவரும் கேளிக்கை சாதனங்கள் – உதாரணமாக ரேடியோ, ரீவி, கணினிவோக்மேன், ஐபாட் போன்ற பல புதிய பொருள்கள் இவை எல்லாம் நம்மை சந்தோசமாக வைத்திருக்கும் என்ற அவ நம்பிக்கையிலே மேலும் புதிது புதிதாக சந்தைக்கு வரவழைத்ததுக் கொண்டு இருக்கின்றோம். எனினும் இவை அனைத்தும் நம்மை […]

செய்முறை சட்டியில் நல்லெண்ணை ஊற்றி குடை மிளகாயை வதக்கவும். வதக்கி வந்ததும் உருளைக்கிழங்கு, கரட் இரண்டையும் போட்டு வதக்கவும் பின் கீரையையும் போட்டு வதக்கவும். முட்டையை நன்றாக அடிக்கவும் அதனுடன் சீஸ், பால் என்பவற்றினை சேர்த்து அடித்த பின் வதக்கி வைத்திருக்கவும். மரக்கறிகளை முட்டைக் கலவையுடன் சேர்க்கவும். உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கவும் பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் இக் கலவையை ஊற்றி 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு சிவப்பு […]