You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September, 2015
செய்முறை பயறு பருப்பு என்பவற்றுள் சிறிது நீர் விட்டு நன்றாக அவித்துக் கொள்ளவும். இறைச்சி, மரக்கறி மற்றும் இறால் என்பவற்றைச் சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அதற்குள் உள்ளி வெங்காயம், மிளகாய், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், என்பனவற்றையும் சேர்த்து அவிக்கவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அவித்த பயறு பருப்புடன் இக்கலவையைச் சேர்த்துக்கிளறவும். தேவையான பொருட்கள் பயறு ½Kg பருப்பு ½Kg கோழி இறைச்சி 1Kg இறால் 250g கறிமிளகாய் 50g பச்சை மிளகாய் தேவையானளவு வெங்காயம் 50g […]
புரதக்கலவைப் பிட்டு தேவையான பொருட்கள் கொள்ளுமா 50 கிராம் முளைகட்டி காயவைத்த பயறுமா ( அவித்தது) 50 கிராம் வறுத்து கோது நீக்கிய உழுத்தம்மா 100 கிராம் உப்பு தேவையான அளவு தேங்காய்ப்பூ சிறிதளவு செய்முறை கொள்ளு, உழுந்தை வறுத்து கோது நீக்கி மாவாக்கவும். பயறை முளைக்க வைத்து வெயிலில் உலர்த்தி பின் மாவாக்கவும். மேலே கூறப்பட்ட மாவகைகளை அரித்து ஒன்றாகச் சேர்த்து உப்பையும் ருசிக்கேற்ப சேர்த்து ஆவியடங்கிய சுடுநீர் சேர்த்து குழைத்து மணி மணியாக உலர்த்தி […]
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பாம்பு விஷத்தில் என்னவுள்ளது? பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு […]
அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது. மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒருவர் […]
மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆழுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் இல்லை. அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி போன்று ஆறுமுகநாவலர் இல்லை. தியாகி பொன் சிவகுமாரன் போன்று தந்தை செல்வா இல்லை. நடிகர் விவேக் போன்று வடிவேலு இல்லை. இவர்கள் ஒவ்வொருவருமே ஆற்றலும் ஆர்ப்பணிப்பும் […]
செய்முறை பயற்றம்மாவை சிறிது உப்பு சேர்த்து ரொட்டி பதத்திற்கு குழைக்கவும். தட்டையாக தட்டி எண்ணெய் பூசிய தட்டில் போட்டு அவிந்ததும் மறுபக்கம் பிரட்டி எடுக்கவும். பின் அதை சிறு துண்டுகளாக்கவும். கரட்டை தோல் நீக்கி கழுவி உராய்கருவியில் உரோஞ்சிக் கொள்ளவும். வெங்காயம் மிளகாயை சுத்தமாக்கி அளவாக வெட்டிக் கொள்ளவும். சீவிய கரட்டை சிறிது வாட்டிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை தாளித்து பதம் வந்ததும் கரட்டை அதனுள் கொட்டிகிளறவும். சிறிது நேரத்தின் பின் முட்டையை அதனுள் விட்டு கிளறவும். […]
எப்போதும் பாரம்பரிய பழக்கங்களுக்கும் புதிய மருத்துவ அறிவுரைகளுக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழுபறி இருந்து கொண்டே இருக்கும். இது கர்ப்பிணி தாய்மாருக்கும் அவர்களின் உணவு பற்றிய பல கேள்விகளுக்கும் பொருந்தும். ஒரு பெண் தாயாக மாறத் தொடங்கியவுடன் பலரும் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று அறிவுரை கூறத்தொடங்கிவிடுவர்கள். உண்மையில் அந்த புதிதாக தாயாக போகும் பெண் தான் பாவம். மேலும் கிடைக்கும் சில அறிவுரைகளையும் வாசித்து அவளும் குழம்பி விடுவாள். இவ்வாறன சந்தேகங்களை தீர்ப்பதற்கு சற்று […]
போலி மருந்துகளைத் தடுக்கும் நோக்குடன், மருந்து வில்லைகளில் பதிக்கக்கூடிய முப்பரிமாண தொடர்-இலக்க குறியீடுகளை (barcode|)பிரிட்டனில் உள்ள பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தக் குறியீடுகளை உருவாக்குவதற்கு பிராட்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவொன்றே உதவியுள்ளது. ஒவ்வொரு வில்லையிலும் பொதிக்கக்கூடிய வகையில் அவர்கள் இந்த சிறப்பு குறியீட்டு அச்சுக்களை உருவாக்கியுள்ளனர். ஒளியை பாய்ச்சும் ஸ்கேனர் கருவி மூலம் இந்தக் குறியீட்டு தொடர்-இலக்கத்தின் விளக்கத்தை அறிந்துகொள்ள முடியும். மருந்துக் கம்பனிகளும் கடிகாரக் கம்பனிகளும் இந்த தொழில்நுட்பத்தை தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்த விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டு, தொலைக்காட்சி , இணையம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது டிவி, கம்பூய்ட்டர் கேம்ஸிலேயே மூழ்கி நேரத்தை வீணாக்காதே என்று பெற்றோர்கள் அலுத்துக்கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல் தெரிகிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றை வைத்துப் பார்க்கையில் .. ! பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் பதினோராவது ஆண்டு, […]
2050ஆம் ஆண்டில் டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலகளவில் தற்போது இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரித்து, பதிமூன்று கோடியை தாண்டிவிடும் என்று ஒரு புதிய கணிப்பு காட்டுகிறது. முன்னர் இருந்ததை விட தற்போது மக்கள் நீண்ட காலம் வாழ்வதனால் டிமென்ஷியாவின் பாதிப்பும் அதிகரிக்கும் என்றும், இது பொதுசுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு கடுமையான சவால்களை எற்படுத்துவதாகவும், அல்ஸைமர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவிவரும் அல்ஸைமர்ஸ் டிசீஸ் இண்டர்நேஷ்னல் என்கிற […]