You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July 22nd, 2015

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத […]