You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June 22nd, 2015

இளம்பருவத்தில் கூடுதல் எடைகொண்டவராக, அதிகமான உடல்பருமனுடன் இருப்பவர்கள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு குதப்புற்றுநோய் தோன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்வீடனில் நடந்த ஆய்விற்காக சுமார் 2,40,000 ஆண்களை முப்பத்தி ஐந்து ஆண்டுகள் மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் Gut என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இளம்பருவத்தில் அதிக உடல்பருமனோடும் கூடுதல் எடையுடனும் காணப்பட்டவர்களுக்கு, மற்றவர்களைவிட இரண்டுமடங்கு அதிகமாக குதப்புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. […]