You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June 11th, 2015

இன்று காய்ச்சல் என்றவுடன் எல்லோரும் பயப்படுவது டெங்குக் காய்ச்சலுக்குத்தான். ஆனால் டெங்கைப்போல ஆபத்தான காய்ச்சல் ஒன்று இருப்பதைப்பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் உண்ணிக்காய்ச்சல். இது யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. விரைவில் இனங்காணப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம். உண்ணிக்காய்ச்சலை ஆங்கிலத்தில் “ஸ்கிரப் டைபஸ்” (Scrub Typhus) என அழைப்பார்கள். இது Orientia tsutsugamushi என்னும் சிறிய Richetsia ஆல் ஏற்படுகின்றது. ( பக்டீரியா போன்ற நுண்ணுயிர்) இந்தக்கிருமிகள் Trambiculid mits எனப்படும் தெள்ளின் குடம்பிப்பருவத்தினால் பரப்ப்படுகின்றன. […]