You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2015

சுடுநீரால் ஏற்படும் விபத்துக்கள் பொதுவாக சிறுவர்களை பாதிக்கின்றன. இதன் மூலம் சாதாரணமான தோல் காயம், கொப்புளங்கள் முதல் பாரதூரமான உயிர் ஆபத்துவரை ஏற்படலாம். சுடுநீரால் ஏற்படும் சாதாரண தோல் காயங்களுக்கு எமது வீடுகளிலேயே சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு முதலில் சுடுநீர்பட்ட இடத்தில் அணியப்பட்டுள்ள ஆடைகளை அகற்ற வேண்டும். அதன் பின்னர் சாதாரண ஓடும் குழாய் நீரினால் சுடுநீர்பட்ட இடத்தை 15 – 30 நிமிடங்களுக்கு நனைக்க வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தை தொற்றற் Gauze Bandage […]

செய்முறை பச்சைச் சோளனை கழுவி எடுக்கவும் ( அவிக்கவும்) இன்னொரு பாத்திரத்தில் நல்லெண்ணை மல்லி இலை, உள்ளி மற்றும் சீனி, மிளகு தூள், உப்புப் போட்டு கலக்கவும். பி்ன் அவித்த கீரை, தக்காளி என்பவற்றையும் கலந்து பரிமாறவும். தேவையான பொருட்கள் அளவு தண்ணீர் ஒன்றரைக் கப் சோளம் ¾ கப் மிளகு தூள் 1 தே. கரண்டி உப்பு 1 தே. கரண்டி நல்லெண்னை 2 மே. கரண்டி உள்ளி 1 பல்லு சீனி (Sugar fre) […]

மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்களை வராமல் தடுக்கலமா? இது நடை முறைச் சாத்தியமா? அல்லது வெறும் கனவுதானா? போன்ற வினாக்கள் எம் முன்னே எழுந்து கொண்டிருக்கின்றன. அன்று கண்ட கனவுகள் சில இன்று நிஜமாவது போலவே எமது முயற்சிகள் சரியான திசையில் தொடருமாக இருந்தால் இன்று காணும் கனவுகள் பல நாளை நிஜமாவது நிச்சயம். அன்று சுகபோக வாழ்வு வாழ்ந்த வசதிபடைத்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த இந்த நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க […]

பதப்படுத்தப்பட்ட பழங்கள், நாள்பட்ட பழங்களை உண்பதை விட புதிய பழவகைகளை எம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போசாக்கு அதிகமாகக் கிடைக்கும். கோடை காலங்களில் கூடிய அளவில் பழவகைகளை நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில் பழவகைகளில் கூடியளவு நீர்ப்பற்று இருப்பதானால் நாம் இழக்கும் நீரினை சமப்படுத்த இது ஏதுவாக இருக்கும். பழங்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புச்சத்து இருக்கின்றது. கூடிய அளவு நார்ப்பொருள்கள் காணப்படுகின்றன. இதனால் எம்முடைய உடற்பருமனை குறைத்து ஆரோக்கிய உடலை அடைய முடியும். உடலில் உள்ள […]

சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது யாராவது அதை உணருகிறோமா? இல்லை. ஆனால் பல்வேறு நோய் நிலைமைகளில், தேவையான அளவு பிராணவாயுவை ( ஒட்சிசனை) எமது சுவாசப்பையானது. மூளை உட்பட உடலுறுப்புகளுக்கு வழங்க முடியாவிடின் சுவாச விகிதம் அதிகரிப்பதுடன் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. சுவாசத் தொகுதியுடன் தொடர்பான காரணங்கள் நாசி தொடக்கம் சுவாசப்பையிலுள்ள குழாய்கள் வரை காற்று போய் வருவதில் தடைகள் ஏற்படின் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உதாரணமாக […]

வளர்ந்த குழந்தைகள் இரவு நேர தூக்கத்தின் போது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை எண்ணி பெற்றோர்கள் கவலைப்படுவது இயல்பு. பொதுவாக ஒரு குழந்தை 5 தொடக்கம் 6 வயதை அடையும் போது தானாகவே சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறனை அடைகின்றது. 90 – 95 வீதமான சிறார்கள் பகலில் சிறுநீர் கழிப்பதை தம் கட்டுப்பாட்டுக்குள்ளும், 80 – 85 வீதமான சிறார்கள் இரவில் சிறுநீர் கழிப்பதைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் 6 […]

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளும் சருமநோய் பாதிப்புகளும் பொதுவாகப் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நீரிழிவில் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால் தோற் பகுதி உணர்வுதிறன் குறைவு ஏற்பட்டு தோலில் அடிக்கடி புண்கள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதால் சருமம் பாதிப்படைகின்றது. குருதியில் வெல்ல மட்டத்தை அதிகரிக்காது கட்டுப்படுத்துவதன் மூலம், குருதியிலும் தோற் பகுதியிலும் காணப்படுகின்ற பக்றீரியாக்கள், பங்கசுக்கள், பூஞ்சனக் கிருமிகளின் ஊடாகப் போசனையைக் கட்டுப்படுத்தலாம். இதனால் அவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் குறைக்கலாம். […]

மேக நோய் / சிபிலிஸ் ( Syphilis) என்றால் என்ன? மேக நோய் / சிபிலிஸ் என்னும் நோய் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற Treponema Pallidum எனும் சுருளி வடிவம் கொண்ட அசையும் ஆற்றலுடைய பற்றீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோய் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த நோயின் தாக்கமும், பரவுகையும் எவ்வாறு உள்ளது? இந்த நோய் பாலியல் தொழிலாளர் போன்றவர்களையே அதிகம் பீடிக்கின்றது. மேலும் ஓரினச் சேர்க்கையிலீடுபடும் […]

இவ்வுலகில் பார்வை அற்றவர்களும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் உலக சுகாதார மேம்பாடு காரணமாக முதியோர் தொகை அதிகரிப்பதே. இந்த நிலை வளர்முக , வளர்ந்த நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் 80 வீத பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாட்டு நோய்கள் தடுக்கப்படக் கூடியவை என்பதாகும். முக்கிய நோய்கள் ஆவன […]