You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 26th, 2015

கோடைகாலம் வந்தாலே அனைவருக்கும் பழங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும். தண்ணீர்த்தாகம், வெப்பம் என்பவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டும். கண்களைக் கவரும் சிவப்பு வண்ணத்தில் உள்ளூரிலே பயிரிடப்படும் ருசியான ஜம்புப் பழத்தை இந்தக் கோடையில் உண்டு பயன்பெறுவோம். ஜம்புப்பழம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். உயிர்ச்சத்து C கொண்டதும், சுவையானதும், கண்களைக் கவரும் நிறம் உடையதுமு், குழந்தைகளுக்கு விருப்பமானதும், கோடைகாலத்துக்கு ஏற்றதுமான ஜம்புப்பழம், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். ஜம்புப்பழத்தில் உள்ள சத்துக்கள் (100கிராமுக்கு கணக்கிடப்பட்டுள்ளது) ஈரப்பதன் – […]