You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 21st, 2015

பழங்கள் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது யாவரும் அறிந்ததே. இந்தப் பழங்களின் மகிமையை அறிந்ததாலேயே முருகக் கடவுள்கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபம்கொண்டு பழனி மலைவரை போனதாக சொல்லப்படுகிறது. பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவச் சிறப்பியல்புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத்துவப் பழமாக ஜம்புப் பழமே விளங்குகின்றது. சுவைமிக்க இந்தப் பழம் கலோரி பெறுமானம் குறைந்தது. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. நீரிழிவு நோயாளரில் கூட குருதி வெல்லத்தின் […]