You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 8th, 2015

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளும் சருமநோய் பாதிப்புகளும் பொதுவாகப் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நீரிழிவில் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால் தோற் பகுதி உணர்வுதிறன் குறைவு ஏற்பட்டு தோலில் அடிக்கடி புண்கள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதால் சருமம் பாதிப்படைகின்றது. குருதியில் வெல்ல மட்டத்தை அதிகரிக்காது கட்டுப்படுத்துவதன் மூலம், குருதியிலும் தோற் பகுதியிலும் காணப்படுகின்ற பக்றீரியாக்கள், பங்கசுக்கள், பூஞ்சனக் கிருமிகளின் ஊடாகப் போசனையைக் கட்டுப்படுத்தலாம். இதனால் அவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் குறைக்கலாம். […]