You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2015

கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகின்றது. உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விரல்களைப் விசைப்பலகைளின் மூலம் பயன்படுத்தியும் […]

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குபவை இயற்கையாக பழுத்து கனிந்த பழங்களை உண்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பம் தரக்கூடியது. ஆனால் தற்போது பல்வேறுபட்ட காரணங்களுக்காக இரசாயண பதார்த்தங்கள் மூலம் காய்கள் பழுக்கவைக்கப்படுகின்றன. பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் பல சந்தர்ப்பங்களில் வேறுவகை இரசாயண பதார்த்தங்கள் மூலம் நீண்டநாட்களிற்கு அழுகாமல் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மூலம் எமக்கு பழங்களின் உண்மையான சுவை கிடைப்பதில்லை அத்துடன் புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகின்றோம். முற்றிய காய்களை பழுக்க வைப்பதற்கு பாரம்பரிய முறைப்படி […]

இது மிகுந்த சொறியை ஏற்படுத்தக்கூடிய தொற்றக்கூடிய ஒர் தோல் நோயாகும். இது Sarcoptes scabii என்னும் ஒரு வகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இதன் முக்கியமான குணங்குறியே, உடம்பில் சொறிவு ஏற்படுவதாகும். இந்த நோய்த் தொற்றுடைய ஒருவரின் தோலிலிருந்து நேரடித் தொடுகை மூலம் கடத்தப்படுகிறது. பெரியவர்களிலும் வளர்ந்தவர்களிலும் இதன் அறிகுறிகளாவன. மிகுந்த சொறிவுத் தன்மையுடன் பருக்களும், கொப்புளங்களும் காணப்படும், பொதுவாக கைகளின் விரல் இடைகளிலும் மணிக்கட்டுகள் முழங்கையிக் பின்புறம் முழங்கால் இடுப்பு, தொப்புள் முலையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதங்களின் […]

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான ஆட்களை ஸ்கான் செய்து பார்த்த போது தினமும் மிதமான அளவு காப்பியை அருந்தி வருபவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் படிவதற்கான ஆரம்பமான, ”கல்சியம் படிதல்” குறைவாகக் காணப்பட்டதாக கூறியுள்ளனர். காப்பி அருந்துவதற்கும் இதய நோய்களுக்குமான தொடர்பு குறித்து ஆய்வு நடந்து […]

ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் செயற்பாட்டுவிருத்தியில் ஏற்படும் ஒரு பின்னடைவு ஆகும். உலகளாவிய ரீதியில் இந்த நோய் நூறு பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஏற்படுகிறது. இலங்கையிலும் இந்த நோய் அதே அளவில் காணப்படுகின்றது. பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகளில் இந்த நோய் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு குழந்தை வேறுபடுகின்றது. சில குழந்தைகள் சாதாரணமாக பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். அதே போல் சில பிள்ளைகளுக்கு விசேட கல்வி […]

நாய்களின் வாழ்நாள் வெறும் 10 -12 வருடம் தான் என்பது செய்தி. அது ஏன் தெரியுமா? நாய்களின் இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத்துடிப்பு மனிதர்களுக்கு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருக்கின்றதோ அவருடைய இதயம் ஆரோக்கியமாக இல்ல என்று அர்த்தம். மேலும் இதயத்துடிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் படபடப்பு ஏற்படுகின்றது. பொதுவாக இதயம் ஒர் இயந்திரம் போன்றது. அந்த இயந்திரம் குறிப்பிட்ட […]

வைத்தியர் : பிள்ளையின் நிறை போதாது…… தாய் :இவவுக்கு இப்ப ஒரு வயது. கிலோ இருக்கிறதா ,மூத்த மகனும் ஒரு வயதில் கிலோ இருந்தவர். குறைவு என்று காட்டேலை. அதுதான் இவவையும் கூட்டிவரேல்லை. வைத்தியர்: இரண்டுபேரின்ரையும் பிறப்பு நிறையையும் சொல்லுங்கோ அம்மா தாய்: இவவுக்கு பிறப்பு நிறை 3.5 கி.கி, மகன் பிறக்கும் போது 1.4 கி.கி இருந்தவர் உங்கள் […]

இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயே முதலிடம் வகிக்கின்றது. பெண்களே ஆண்களைவிட அதிகளவு மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் மார்பகத்தில் உள்ள கட்டிகள் யாவும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. வயதுக்கு ஏற்ப கட்டிகளுக்கான காரணங்களும் வேறுபடுகின்றன. எச்சரிக்கை குணங்குறிகளாவன : மார்பகத்தில் ஒரு தடிப்பு / வீக்கம் / கட்டி காணப்படல் மார்பக்தினுடைய தோல் இழுபட்டு / சுருங்கி இருத்தல் முலைக்காம்பின் தோலில் மாற்றம் ஏற்படல் ஒரு மார்பகத்தினுடைய அளவு வழமைக்கு மாறாக பருத்தல் மார்பக […]

தேவையான பொருட்கள் கோஸ் தக்காளி கடலைமா அரிசிமா மிளகாய் தூள் உப்பு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய் செய்முறை கோஸ், தக்காளி, மிளகாய், வெங்காயம், என்பவற்றை சிறிதாக நறுக்கி கடலைமா, அரிசி மாவை கலந்து எடுத்து அதற்குள் நறுக்கியதை போட்டு மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு போட்டு கறிவேப்பிலை நறுக்கி போட்டு சுட்டு எடுத்தல். காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.பாஸ்கரன் ராஜேஸ்வரி

இயற்கை மனிதனுக்கு வழங்கிய ஒர் அருட்கொடை தான் கனிவர்க்கங்கங்கள். அந்த வகையில் அண்மைக் காலமாக எமது பகுதிகளில் தெவோர வியாபாரிகளின் வியாபாரப் பொருள்களில் ஒன்றாக நாவல் பழம் காணப்படுகின்றது. நாவல்பழ சீசன் என்றால் பலரது வாய் நீல நிறமாகவே காணப்படுகின்றது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழவகைகளைச் உண்பது சில காலகட்டங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க வல்லது என்று எம் வீடுகளில் வயதானவர்கள் கூறுவது மறுக்கப்பட முடியாத ஒன்றுதான். அந்த வகையில் வரும் சீசனுக்கு கிடைக்கப் பெறும் நாவல் […]