You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2015
இலங்கையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை அந்தக்காலப் பகுதியில் காணப்படவில்லை. இந்த நிலையில் இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணர்ச்த Harry wicondan இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையாளர்களை உருவாக்குவதன் மூலமாக பேச்சு மற்றும் மொழி பிரச்சினை உடையவர்களுக்கு போதுமான சிகிச்சையை வழங்க முடியும் என எண்ணினார். அத்தோடு அவருடைய எண்ணத்தில் உதித்த சிந்தனையை செயல் வடிவமாகவும் மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை டிப்ளோமா பாட நெறியை ஆரம்பிப்பதற்கு அனைத்து தயார்ப்படுத்தல்களையும் திட்டமிட்டு […]
சக்தியின் வடிவங்களில் ஒன்றான ஒலியானது மனிதனதும் சக உயிர்களினதும் பிரதான தொடர்பாடல் ஊடகமாக இருக்கின்றது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இவ் ஒலி கூட மிதமிஞ்சியதாக இருக்கும்போது மனிதனதும் ஏனைய உயிரினங்களினதும் செயற்பாடுகளையும் சமநிலையையும் பாதிக்கும் அளவிற்கு மாசாக்கத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கின்றது. ஒலிமாசாக்கம் என்பது மற்றைய சூழல் மாசாக்கங்கள் போன்று அல்லது சூழலில் எந்த ஒரு விளைவையும் விட்டு வைப்பதில்லை. ஆனாலும் அது மனிதனது உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதிப்படையச் செய்கின்றது. மிகவும் உரத்த ஒலிமற்றும் உரப்புக் குறைந்த […]
உலக காசநோய் விழிப்புணர்வு தினமானது 1982ம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் மார்ச் மாசம் 24ம் திகதி பிரகடனப்படுத்தப்படுகின்றது. டாக்கடது.றொபேட்குக் என்பவர் காசநோயிற்குரிய காரணி Tuberculosis எனப்படும் ஒரு வகை பக்ரீறியா என்று பெர்லின் நாட்டில் இருந்தபடி அறிவித்தபோது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்நோயாளது ஏழு பேரிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் இறப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவரின் கண்டுபிடிப்பே காசநோயை இனங்காணுவதற்கும் குணப்படுத்துவதற்கும் வெளிச்சமான ஒரு பாதையை ஏற்படுத்தித் தந்தது. ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு தொனிப்பொருளை மையமாக வைத்தே […]
மிகப் பொதுவான கிருமித் தொற்றுக்களில் சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றும் ஒன்றாகும். குழந்தைகளிலும், சிறுவர்களிலும் சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்படுமாயின் அதை நாம் முக்கியத்துவமானதாகக் கருதவேண்டும். ஏனேனில், குழந்தைகளுக்கு கிருமித் தொற்று சிறுநீரகத் தொகுதியில் ஏற்பட்டால் வளர்ந்து வரும் சிறு நீரகங்கள் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரகத் தொகுதியில் ஏதாவது பிறவிக்குறைபாடு உள்ளதன் காரணமாகவா கிருமித் தொற்று ஏற்பட்டது எனவும் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றானது பெண்பிள்ளைகளில் 100 பேரில் 8 பேருக்கும் ஆண்பிள்ளைகளில் 100 […]
ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக கண்நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து தற்போதைய சூப்பர்பக் எனப்படும் பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கு கட்டுப்படாத நோய்கிருமிகளை அழிக்க உதவும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர் ஆகியவை உள்ளடங்கிய 9 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களின் நாட்டு மருந்து ஒன்று இந்த சூப்பர்பக்ஸ்களை கொல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எம்ஆர்எஸ்ஏ எனப்படுகின்ற நோய்க்கிருமிகளை இந்த மருந்து கிட்டத்தட்ட முற்றாக அழித்ததைப் பார்த்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். பிரிட்டிஷ் […]
ஆரோக்கியமான மருத்துவத்துறை என்பது மக்களின் உடல், உள சமூக விருத்திகளின் ஊடாகத் தரமான வாழ்க்கை வழங்குகின் மிக உன்னதமான ஒரு தொழிற்பாடு ஆகும். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான நவீன ஆங்கிலத்துறையினுடைய வளர்ச்சியின் மூலமாக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தேர்ச்சியும், சிறப்பத் தன்மை வாய்ந்ததுமான சுகாதார தொழில் வாண்மையாளர்களைக் கொண்ட சிகிச்சை முறைகளைத் தன்னகத்தே இது உள்ளடக்கியுள்ளது. இதன் அடிப்படையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை விசேடத்துவம் பெற்றதும், தற்காலத்தில் மிகவும் அசசியமான […]
மூன்று பேரின் உயிர்க்கலங்களை கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கின்றது. மனித செல்கள் ஒவ்வொன்றலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும். மனித சல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கரு முட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும். சில பெண்களின் கரு முட்டைகளில் இருக்கும் மைடோக்காண்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோக்கான்ரியாக்கள் இருக்கும் கரு முட்டையில் இருந்து உருவாகும் […]
இன்று ஒர் சாதாரண தடிமன், காய்ச்சல் ஏற்பட்டவுடனேயே நாம் மருந்தகங்களுக்குச் ( Pharmacy) சென்று வைத்தியரின் பருந்துரை இன்றி அன்டிபயோட்டிக் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். இது தவறானது. பொதுவாக சாதாரண தடிமன் காய்ச்சலானது வைரஸ் என்னும் வகை நோய்க்கிருமிகளினால் ஏற்படுகின்றது. ஆனால் இவ் அன்டிபயோட்டிக் மாத்திரைகள் வைரஸ் நோய்க்கிருமிகளை அழிக்கமாட்டாது. இவை பக்ரீறியா என்னும் வகை நோய்க்கிருமிகளையே அழிக்கக்கூடியது. எனவே ஒர் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு நாம் தேவையற்ற விதத்தில் அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். எமக்கு ஏற்பட்ட […]
இன்று நாம் இயந்திர மயமான உலகில் வாழ்கின்றோம். காலையிலிருந்து இரவு வரை வேலை, படிப்பு. டிவி பார்த்தல் என நேரம் போய் விடுகின்றது. இதனால் நாம் உண்ணும் உணவைக் கவனிப்பதில்லை. இலகுவாகச் சமிபாடடையக் கூடிய, விரைவாகத் தயாரிக்கக் கூடிய பதப்படுத்தப்பட்ட மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை நாடுகின்றோம். நிறைவான உணவு உண்ணப்படாததினால் எமது உடற் பருமன் அதிகரிக்கின்றது. அத்துடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதக்குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு, நாம் போதிய உடற்பயிற்சிகளையோ உடலை வருத்தி வேலைகளையோ […]
அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது> புத்திசாலிகளாகவும்> கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது. குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் IQ, அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக The Lancet Global Health மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அதாவது> ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது> சுமார் ஓராண்டுகாலம் […]