You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March 24th, 2015

அப்பப்பா! நான் உங்களுடைய பேரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நான் தொலைதூர தேசத்திலே இருப்பதால் உங்கள் பூட்டனை உங்களுக்குக் காட்டமுடியவில்லையே என்ற குற்ற உணா்வு என்றும் என்னுள்ளே இருந்துகொண்டிருக்கிறது. அவனைப் பார்த்திருந்தால் நீங்கள் எவ்வளவு பூரித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த பரந்த பூமியிலே எங்களை நிலைநிறுத்த நீங்கள் பட்ட துயரங்கள் அப்பப்பா! அண்ட சராசரம் அளவு பரந்து விரிந்திருந்த உங்களது உலகம் கடைசிக்காலங்களில் வீடு என்ற வட்டத்துக்குள் முடங்கிப்போனபோது உங்களுக்கு ஏற்பட்ட உள்ளுணா்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் யார்? […]