You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2015
நீரிழிவுநோய் உள்ளவர்களும், அதிகரித்த உடல்நிறை உள்ளவர்களும் சீனியின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும், உடல்நிறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சீனிக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளைப் பெருமளவில் பாவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாவனைக்கு உகந்தன என அனுமதிபெற்று தற்பொழுது பாவனையில் உள்ள இனிப்பூட்டிகளாவன. 1. அச்சலபம் பொட்டாசியம் (Acesephme Potassium) 2. அஸ்பாற்றம் (Aspartame) 3. நியோற்றம் (Neptame) 4. சக்கறீன் (Saccharin) 5. சுக்கிறலோஸ் ( Sucralose) இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்தபொழுதும், இவற்றுக்கு குருதி குளுக்கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ […]
மனிதனுக்கு அடிப்பமைத்தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் எவ்வளவு முக்கியமோ அதேபோல நல்ல தூக்கமும் மிகவும் முக்கியம். நாள்தோறும் உடலாலும் மனதாலும் உழைக்கும் மனிதனுக்கு நித்திரை என்ற ஒய்வு கண்டிப்பாக வேண்டும். தூக்கம் என்பது தானாக வரவேண்டிய ஒன்று நாமாக தேடிப் போனால் வராது. ஆதவாக வரும்போது மறுக்கமுடியாது. நம்மில் சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவர். ஆனால் சிலரோ எப்படிப் படுத்தாலும் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுவர். பெரும்பாலும் வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளில் […]
செய்முறை யாவற்றையும் குமையலாக்கி பொதி செய்து இட்லிச் சட்டியில் அவித்து சுவையூட்டி பரிமாறுங்கள் ( பயறு முளை கட்டியிருத்தல் நன்று ) தேவையான பொருட்கள் அளவு பயறு, பருப்பு, கடலை, கௌபி 100 கிராம் சோயா, அப்பில், கொய்யா தேவையான அளவு வெங்காயம், மிளகு, சீரகம், போஞ்சி 50 கிராம் காலை உணவாகவோ, மாலை நேர உணவாகவோ பரிமாறலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – கே.எஸ்.சிவஞானராஜா
குழந்தைகளில் ஏற்படும் இருதய நோய்களைப் பிரதானமாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) 2. Cyanotic Geart Discase (நீலநிறமாதலுடன் கூடிய இதயநோய்) Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) பெரும்பாலான இந்த நோய்களை சத்திரசிகிச்சையின் மூலமோ அல்லது Cardiac Catheterization மூலமோ முற்றாக குணமாக்கலாம். சில நோய்கள் தானாகவே குணமடையும் தன்மை கொண்டவை. பின்வரும் பிரதான இதய நோய்கள் இந்தப் பிரிவில் அடங்கும். 1. Patcnt Foramce Ovale (PFO) […]
ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் ஆசை நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா ? என்று கேட்டால் 100இற்கு 90 வீதம் இல்லை என்பதே பதில். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆரோக்கியமாக வாழ எமக்கு உணவு பழக்கங்கள் மிகவும் அவசியமாகின்றன. ஏதாவது உடல்நிலை பாதிப்பு என்று வைத்தியரிடம் போனால் மருந்துடன் நல்ல சத்தான சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்று தான் சொல்வார்கள். சரி சத்தான உணவு என்றால் என்ன? இரத்தம், எலும்பு, தசைகள், தோல், நரம்புகளுடன் பின்னிப் […]
அப்பப்பா! நான் உங்களுடைய பேரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நான் தொலைதூர தேசத்திலே இருப்பதால் உங்கள் பூட்டனை உங்களுக்குக் காட்டமுடியவில்லையே என்ற குற்ற உணா்வு என்றும் என்னுள்ளே இருந்துகொண்டிருக்கிறது. அவனைப் பார்த்திருந்தால் நீங்கள் எவ்வளவு பூரித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த பரந்த பூமியிலே எங்களை நிலைநிறுத்த நீங்கள் பட்ட துயரங்கள் அப்பப்பா! அண்ட சராசரம் அளவு பரந்து விரிந்திருந்த உங்களது உலகம் கடைசிக்காலங்களில் வீடு என்ற வட்டத்துக்குள் முடங்கிப்போனபோது உங்களுக்கு ஏற்பட்ட உள்ளுணா்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் யார்? […]
செய்முறை முதலில் முட்டையை வேக வைத்து முட்டையின் ஒட்டை நீக்கி தனியாக வைக்கவும். பின் அதனை இரண்டாக வெட்டி அல்லது முழுமையாக வைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் கடலைமா, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மா பதத்திற்கு சற்று கெட்டியாக குழைத்துக்கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையானளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை கடலைமாவில் பிரட்டவும் பின் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு முட்டை 05 கடலைமா ½ கப் […]
நீரிலுள்ள இரசாயன உள்ளடக்கத்தைப் பொறுத்து, நீரானது வன்னீர், மென்னீர் என வகைப்படுத்தப்படுகிறது. இவற்றில் வன்னீரானது சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்சியம், மக்னீசியம் போன்ற கனிமங்களை அதிகளவில் கொண்ட நீரே வன்னீராகும். தீவுப் பகுதிகளிலுள்ள கிணற்று நீரானது சாதாரண கிணற்று நீரிலும் பார்க்க மிகவும் வன்மையானது. இது கொதிக்க வைப்பதால் அகற்ற முடியாது. ஆனால் சாதாரண கிணற்று நீர் வன்மையானது கொதிக்க வைப்பதால் அகற்றப்படக் கூடியது. இந்த நிலையில் தீவுப்பகுதி மக்கள் அதிகளவில் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். நைதரசன் […]
வைத்தியர் – பிள்ளைக்கு நிறைகுறைவு என்று அனுப்பியிருக்கினம்… தாய் – ஆம் நிறை குறைவுதான், ஆனால் அவன் நல்ல சுட்டி நிறை குறைஞ்சாலும் “அக்ரிவ்” என்றபடியால் நான் கவலைப்படவில்லை. ஆண் பிள்ளை உயரம் குறைவாய் இருக்கிறான் என்றபடியால்தான் வந்தனான். குழந்தைகளின் வளர்ச்சி வயதுக்கேற்ப இருப்பது பெற்றோர்களின் பெருவிருப்பாகும். வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பதால் பல விருப்பத்தகாத பின் விளைவுகளைத் தடுக்க முடியும். சில நேரங்களில் நோய் நிலைமைகளின் ஆரம்ப வெளிப்பாடாகவும் வளர்ச்சிக் குறைபாடு அமைகின்றது. […]
செய்முறை வெட்டிய பாலச்சுளைகளை உப்பு, மஞ்சள் சேர்த்து அளவாக நீர் சேர்த்து /ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.கௌபியை அவித்து எடுக்கவும். கரட் போஞ்சியைவெட்டி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். (கரட்டை நீள்வட்டமாக வெட்டவும். போஞ்சியை ஒரு அங்கலத்துண்டாக வெட்டி பாதியளவில் பிளக்கவும்) உள்ளி, இஞ்சியை மையாக அரைத்து எடுக்கவும். பன்னீர் கட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும். கனிந்த தக்காளிப்பழங்களை அளவான பாத்திரத்தில் இட்டு கொதி நீர் ஊற்றி மூடி விடவும். 10 […]