You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2015

ஒவ்வொரு குடும்பத்தில் ஏற்படும் இழப்புகள் வலிகள் என்பவற்றை மற்றவதுகளால் ஒருபோதும் ஈடுசெய்துவிட முடியாது. இழப்புக்கள் வலிகள் சமூக மட்டத்தில் பல காரணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றில் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்படும் இழப்புகள் பிரதானமாகவே போக்குவரத்து விபத்துக்களாகவே காணப்படுகின்றன. இவ் விபத்துக்களிலும் பிரதானமாக தலையில் ஏற்படும் காயங்களே உயிரிழப்புக்கும் காரணமாகவும் அமைந்து விடுகின்றன. தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளாவன மூளைப்பகுதியினுள் ஏற்படும் இரத்தக் கசிவுகள் மூளையினுள் இரத்தப் பெருக்கு அல்லது கசிவு காரணமாக மனிதனின் அத்தியாவசிய, […]

செய்முறை நல்லெண்ணையில் பாவற்காயை பொரித்து எடுக்கவும். பயறு ஊற வைத்து அவிக்கவும் துண்டு துண்டாக வெட்டிய பேரீச்சம் பழத்தை சேர்க்கவும். மிளகு, சீரகம் அரைத்து தூளாக்கு போடவும். சோளன் மா, உழுந்து மாவையும் தண்ணீர் கரைத்து மேற்கூறிய வற்றையும் சேர்த்து சூடாக்கி இறக்கவும் தேவையான பொருட்கள் அளவு உப்பு தேவையான அளவு பாவற்காய் ½ கிலோ சோளன் மா ¼ கிலோ உழுந்து மா 100 கிராம் பயறு ¼ கிலோ பேரீச்சம்பழம் ¼ கிலோ மிளகுதூள் […]

உலகின் மிகப்பெரிய மருந்துக் கம்பனிகளில் ஒன்றான அஸ்ட்ரா ஸெனெகா புதிய தலைமுறை மருந்துகளை உருவாக்குவதற்கான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. உடலை வலுவிழக்கச் செய்யும் மரபணு ரீதியான பரம்பரை நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கம். கிறிஸ்பெர் எனப்படும் முன்னேறிவரும் தொழில்நுட்பம் இந்த ஆய்வுக்காக முதற்தடவையாக பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மரபணுவை குணப்படுத்தும் தொழிநுட்பமே கிறிஸ்பெர் எனப்படுகின்றது. குறித்த நோயை ஏற்படுத்துகின்ற மரபணுவுவை குணப்படுத்த எந்த மருந்து மிகச் சிறந்த வகையில் […]

சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறு தயாரித்து விற்கும் முறையில் மறுசீர் செய்யுமாறும் எம்.எஸ்.எஃப் எனும் எல்லைகளற்ற மருந்துவர்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. சிறுவர்களுக்கான மருந்துகளின் விலை 2001ம் ஆண்டு இருந்ததை விட 68 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்று விடுத்துள்ளது. வளரும் நாடுகளில் நிமோனியா தடுப்பு மருந்துகளுக்கு வளர்ச்சியடைந்த நாடான பிரான்ஸை விட ஏனைய நாடுகள் அதிகமான விலையை கொடுக்க நேரிடுவதாக கூறப்படுகின்றது. இந்த அமைப்பின் அறிக்கை பெருமளவு சரியானதே என்கிறார் […]

செய்முறை துருவிய பீற்றூட்டையும் கரட்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு சூடாக்கவும்,பின் தேவையான அளவு எள்ளை வறுத்து சூடாக்கிய கலவையுடன் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணையையும் சேர்த்து தேவையான அளவு சீனி, உப்பு, சிறிதளவு ஏலக்காய் பொடியையும் சேர்த்துச் சூடாக்கி கிளவும், பின் நல்லெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மட்டப்படுத்தி பின் வெட்டி எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு பீற்றுட் தேவையான அளவு கரட் தேவையான அளவு எள் தேவையான அளவு சீனி (sugar free) தேவையான அளவு உப்பு, […]

குழந்தைகளுக்கு எத்தனை தடவைகள் உணவு வழங்கப்பட வேண்டும் என்பது, குழந்தை உண்ணும் உணவின் சக்தியினளவிலும், கொடுக்கப்படும் உணவில் எவ்வளவை குழந்தை உட்கொள்கின்றது என்பதையும் பொறுத்தும் அமையும். ஒன்று தொடக்கம் இரண்டு தேக்கரண்டியளவு எண்ணெயை உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தும் போது, உணவிலுள்ள சக்தியினளவு அதிகரிக்கும். பொதுவாக மேலதிக ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டு 1 – 2 மாதங்களில் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டு விடும். பின்வரும் அட்டவணையில் குழந்தைகளின் வயதிற்கேற்ப பொதுவாக வழங்கப்கூடிய மேலதிக உணவுகளும், அளவுகளும் வேளைகளும் தரப்பட்டுள்ளது. […]

இலங்கையில் தாதிய பயிற்சிக் கல்லூரியில் கற்கும் சகல மாணவர்களுக்கும் தொழில் உத்தரவாதத்துடன் பயிற்சிக் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 16000 ரூபாய்க்கு மேற்பட்ட தெகை சம்பளமாகவும் கிடைக்கின்றது. இது கா. பொ. த உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் ஆகக் குறைந்த அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்ததும், கா. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தியும் பெற்ற மாணவர்களுக்கான சரியான தொழித் தேர்வாகும். ஒவ்வொரு வருடமும் தாதிய பயிற்சிக் கல்லூரிகளுக் […]