You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2015
குளுக்கோமா எனப்படுவது கண்ணில் உள்ள பார்வை நரம்பு பாதிக்கப்படும் ஒரு நிலையாகும். கண்ணினுள் உள்ள அழுத்தம் (Eye pressure) அதிகரிப்பது இந்நரம்பு பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். பிரதானமாக இரண்டுவகையான குளுக்கோமா உள்ளது சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Closed angle glaucoma) படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Open angle glaucoma) சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கூடுதலாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது. இது ஒரு அவசர […]
நீங்கள் எடுக்கும் மருந்துகள் உங்களுக்குச் சரியான முறையில் பயன்படவேண்டுமெனில், சில விதிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளுதல் அவசியம். மருந்து எடுக்க வரும்போது, வைத்தியர்கள், மருந்தாளர்கள் கூறும் அறிவுரைகளை அதிக கவனத்தில் எடுக்கவும். வரும்போது, சிறிய பைகளோ (Bag) , பெரிய கடித உறைகளையோ கொண்டுவருதல் மூலம் உரிய மருந்துகளின் பெயரையும் எடுக்கும் மறையையும் அதில் எழுதுவிக்க முடியும். மருந்துக் குளிசைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்தாளரை அணுகவும். ஆனால் ஒரு முறை பாவித்த உறையை பத்திரமாய் பாதுகாத்து […]
உறைகின்ற எண்ணெய் வகைகளைத் தவிருங்கள், சமைத்த எண்ணெய் வகைகளை மீண்டும் பாவிப்பதைக் குறையுங்கள். பால், பால் உற்பத்தி உணவுகளை பாவிப்பதை ஊக்குவியுங்கள், பாலில் இனிப்புக் கலந்து பாவிப்பதைத் தவிருங்கள். பழங்களை உண்ணுவது பழச்சாற்றைக் குடிப்பதிலும் பார்க்கச் சிறந்தது. சுத்தமான குடிதண்ணீர், கொதித்து ஆறிய குடிதண்ணீர், வடிகட்டிய குடிதண்ணீர் போன்றவற்றைப் பாவிப்பதன் மூலம் நீரினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கலாம். உங்கள் உடலுக்கு ஒவ்வாத அலர்ஜி ஏற்படும் உணவுகளைத் தவிருங்கள். மெதுவாக உண்ணுங்கள், வாயில் சுரக்கம் உமிழ் நீர் உணவில் […]
செய்முறை முட்டையை அவித்து வெட்டிக் கொள்க. கரட்டை சுத்தமாக்கி சீவி வறுத்துக் கொள்க. கோவாவை சிறு துண்டாக வெட்டி எண்ணெய் பூசிய தட்டில் வைத்துக் கொள்க. மீனை சுத்தம் செய்து உப்பிட்டு அவித்துக் கொள்க. வெங்காயம், உள்ள, மிளகாய் சுத்தமாக்கி வெட்டிக் கொள்க. சட்டியில் கடுகு, பெ. சீரகத்தை போட்டு வெடித்ததும் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், மிளகாய், உள்ளி, கருவேப்பிலை போட்டு பொன்னிறமானதும் முட்டை தவிர்ந்த ஏனைய தயார் நிலையில் பொருட்கள் போட்டு உப்பு, தூள் இட்டு […]
எக்ஸிமா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை நோயாகும். இது கிருமித் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இந்நோயானது சில நபர்களுக்கு மட்டுமே ஏற்படும். இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணுவதாலும் இறப்பர் பாதணிகளை அணிதல் போன்றவற்றாலும் ஏற்படலாம். இந்நோயானது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது வெறுமனே தோல் கடியை மட்டும் ஏற்படுத்தும். சிலருக்கு இது தோல்கடியுடன் சேர்த்து அந்தப் பகுதியில் நீர் போன்ற திரவம் வடிதலையும் ஏற்படுத்தும். இத்தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்கள் […]
சொந்த இயற்கையான முத்துப்பற்களை தாங்கமுடியாத பல்வலி ஏற்பட்டாலும் அதைக் காப்பாற்ற முடியுமானால் நிச்சயமாக அது வரப்பிரசாதமாகும். இக்கைங்கரியத்தை பல்மருத்துவர்கள் பல்வேர் சிகிச்சை முறை மூலம் செய்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்பொழுது வலி வந்த பற்களை பாதுகாப்பதையே விரும்புகின்றார்கள் சொந்தப்பற்களை பாதுகாப்பது உணவை நன்றாக சுவைத்துப் சாப்பிடுவதற்கும் பளீரென்ற வசீகரப் புன்னகைக்கும் கனீரென்ற சொல் உச்சரிப்பிற்கும் வாழ்க்கையை வசீகர முறைச் சிகிச்சையால் பல் மருத்துவர்கள் மக்கள் தம் சொந்தப் பற்களுடன் வாழ்நாள் முழுக்க வாழ வழி செய்கின்றார்கள். […]
உலகளாவிய ரீதியில் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக பெப்ரவரி 4ம் திகதி முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. புற்றுநோயானது உலகளாவிய ரீதியில் முன்னிலையில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்திற்குகிணங்க 84 மில்லியன் மக்கள் இந்த நோயால் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சாவடைவார்கள் என்ற கருத்து உள்ளது. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலும், எப்படியெல்லாம் புற்றுநோயை கண்டு பிடிக்கலாம், குறைக்கலாம். தடுக்கலாம் […]
தேவையான பொருட்கள் உழுந்து, அரைத்த மா – சிறிதளவு – 100g அப்பிள் கொய்யா பழம் உள்ளி வெங்காயம் சிறிதளவு வறுத்தல் மிளகாய் வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம் கரட் சோயா, அவரை நல்லெண்ணெய் செய்முறை யாவற்றையும் குழைத்து தோசையாகவோ இட்லியாகவோ ஆக்குதல். காலை உணவாகவோஈ இரவு உணவாகவோ பரிமாறலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Mr.K.S.சிவஞானராஜா
வருடந்தோறும் பெப்ரவரி 4ம் திகதி புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதாவது புற்றுநோய் பற்றிய சுமையை எல்லா நாடுகளும் உலகளாவிய ரீதியில் இணைந்து எவ்வாறு சிந்திக்கலாம் என்பதைப் பற்றி தம் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அதேவகையில் 2015ம் ஆண்டின் தொனிப்பொருள் உணர்த்திநிற்பது யாதெனில் “எமக்குப் பின்னால் நிற்காதீர்” யாவரும் ஒன்றினைவோம்” புற்றுநோயானது மனிதனின் உடலிலுள்ள கலங்களானவை கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி மற்றும் பரவிக்கொண்டு செல்லும் செயற்பாட்டிலான நிலைமையாகும். இந்நிலைமையானது உடலிலுள்ள அனேகமான […]
“பாலோடு தேன் கலந்தற்றே பனி மொழி வாலெயிறும் ஊறி நீர்” என்பான் வள்ளுவர். பனி போன்ற குளிர்ச்சியான சொற்களைப் பேசுகின்ற என் காதலியின் பற்களிலிருந்து வருகின்ற நீர் பாலும் தேனும் கலந்தது போல் இனிமையானது என்பது இதன் பொருள். காதலியின் எச்சில் அழுதம் என்று இலக்கியங்கள் விளிக்கின்றன. எச்சில் அமுதமோ இல்லையோ அது நாற்றமில்லாமல் வாயில் புற்றுநோய் இல்லாமல் இருக்க வாய்ச்சுகாதாரமும் மிகவும் முக்கியமானதாகும். புற்றுநோயில் புற்றுநோய்க்கலங்கள் ஒட்டுமொத்த வெளிப்புறத் தோற்றம் கால்களை விரித்திருக்கும். நண்டின் தோற்றத்தை […]