You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2015
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இளம் வயதினரிடையே இது ஒரு முக்கிய பிரச்சினையாகவும் இருக்கிறது. சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக முகப்பருக்கள் எமது தோலின் கீழ் காணப்படும் நெய்சுரப்பிகளால் சுரக்கப்படும் Sebum எனும் திரவப்பொருள் அதிகமாக சுரக்கும்போது முகப்பருக்கள் தோன்றும் வாயப்பு உண்டு. சுரக்கப்படும் அளவை பொறுத்து பருக்களின் அளவும் வேறுபடும். இலிங்க ஓமோன்கள் இளம் பருவத்தில் அதிகமாகச் சுரப்பதாலும் பருக்கள் இப்பருவத்தில் அதிகமாக தோன்றும். எமது தோலில் காணப்படும் […]
சிக்கனத்துக்க பெயர் எடுத்தவர்கள் நாம். சேமிக்கும் பழக்கம் எம்பலத்துக்கு பக்கபலமாக இருந்தது. நாம் சிறுகச் சிறுகச் சேமித்த சேமிப்புகள் சத்துமா பேணிகளுக்கும், டொனிக்குகளுக்கும், பலத்துக்கு என்று சொல்லிவரும் மாத்திரைகளுக்கும், அநாவசிய மருத்துவச் செலவுகளுக்கும், இரசாயன உணவுகளுக்கும் இரையாசிக் கொண்டிருப்பது ஒரு வேதனையான விடயமாகும். சமூகம் ஆரோக்கியம் கிடைக்குமென்று நம்பி, ஆபத்தான பலவற்றை வாங்கி உட்கொள்வது நோயை விலைகொடுத்து வாங்குவதுக்கு ஒப்பானது. இயற்கைதான் எமது இனிய வைத்தியன். தடிமன் குறுகியகால வயிற்றோட்டம், தசைப்பிடிப்பு, சாதாரண கை, கால் உளைவு, […]
உங்கள் முகப் பராமரிப்பில் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ அதைவிட உங்கள் பாதங்களை பராமரிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உண்டு. ஏனெனில் இடத்துக்கு இடம் நகர்ந்து எமது தேவைகளை இயல்பாக பூர்த்திசெய்வதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கையான கொடை பாதங்களாகும். எனவே செல்வத்தை நாம் கவனமின்றி விடுவது நியாயமாகுமா? உங்கள் ஆரோக்கியமான பாதக் கவனிப்புக்காக….. உங்கள் பாதங்களைத் தினமும் கூர்ந்து அவதானித்தல் வேண்டும் அத்துடன் பாதங்களைச் சுத்தமாக பேணுதல் வேண்டும். குறைந்தது பாதங்களை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது […]
செய்முறை வெண்டிக்காயயை சுத்தப்படுத்தி ( வெண்டி விதையை) கொதித்த தண்ணீரில் வைத்து அமிழ்த்தி மூடிவிடவும். இறைச்சியை சிறிதளவாக வெட்டி அதனுடன் வெட்டி அதனுடன் வெண்டி விதையையும் போட்டு பிரட்டல் கறிபோல வைக்கவும் (பற்றிஸ்கறி) அதன்பிறகு வெண்டிக்காய்க்குள் கறியை வைத்து முட்டை அல்லது கடலை மாவினுள் நன்றாக தேய்த்து எடுத்து றக்ஸ் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு வெண்டிக்காய் ¼ Kg கோழி இறைச்சி ( எலும்பில்லாது) ¼ Kg வெங்காயம் 1 (பெரிது) உள்ளி […]
விபத்து நடந்தவுடன் அதைச் சூழ்நின்று வேடிக்கை பார்ப்பதையும், அல்லது அதிலிருந்து விலகி ஒடுவதையும் விடுத்து, காயப்பட்டவரை எவ்வளவு விரைவாக வைத்தியசாலைக்கு சிக்கல்கள் ஏற்படாமல் அனுப்பும் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோம். இதனால் காயப்பட்டவர் இறப்பதிலிருந்து, மேலும் அங்கவீனமடைவதிலிருந்தும் காப்பாற்ற முடியும். முதலாவதாக விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவர் சுவாசத்தை அவதானிக்க வேண்டும். சுவாசம் இருக்கின்றதா அல்லது கஷ்டப்பட்டு சுவாசிக்கின்றாரா என்பதை அவதானிக்க வேண்டும். இதை அவதானித்து அவரது மூக்கு, வாய் பகுதிகளில் மண், கல் போன்றவற்றால் சுவாசப்பாதை […]
செய்முறை துவரம் பருப்பு, உழுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சம அளவில் எடுத்து தனித் தனியாக ஊறவைத்து 2 மணி நேரத்துக்கு பின் அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி நல்லெண்ணை விட்டு குண்டு தோசை அச்சில் சுட்டு எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்கள் அளவு துவரம் பருப்பு 100g உழுத்தம் பருப்பு 100g கடலை பருப்பு 100g மஞ்சள், உப்பு தேவையான அளவு நல்லெண்ணை தேவையான அளவு பாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms ஜோய் […]
இரத்த தானம் தெரியும் அதென்ன குருதிச் சிறு தட்டு பரித்தியாகம்? இதுவும் இரத்த தானம் போன்றதே ஆனால் அதினிலும் விசேடமானது. இதைப்பற்றி நாம் இப்போது அறிந்து கொள்வோம். முதலில் “குருதிச் சிறு தட்டு” என்றால் என்னவென்று அறிவோம் குருதிச் சிறு தட்டு என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பகுதி அல்லது கூறு எனலாம். இரத்த பெருக்கு ஏற்படாமல் இருக்க உதவிபுரிகின்றது. அதாவது ஒரு காயம் ஏற்பட்டால் அதனை இந்த குருதிச் சிறு தட்டுகளின் உதவியுடன் எமது ஒடல் […]
வடக்குமாகாண முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கான சுகாதார வழிவுப்புணர்வு கருத்தரங்கு யாழ் பொது நூலக மண்டபத்தில் 15 – 12 -2014 அன்று நடைபெற்றது.
வடக்குமாகாண முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கான சுகாதார வழிவுப்புணர்வு கருத்தரங்கு யாழ் பொது நூலக மண்டபத்தில் 15 – 12 -2014 அன்று நடைபெற்றது.
வடக்குமாகாண முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கான சுகாதார வழிவுப்புணர்வு கருத்தரங்கு யாழ் பொது நூலக மண்டபத்தில் 15 – 12 -2014 அன்று நடைபெற்றது.