You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2014
உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட நோய் அம்மை நோய் ஆகும். அம்மை நோய்க்கு அக்காலத்தில் எவ்வித மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு ஆரம்பத்தில் நாட்டு மருந்துகளே பயன்படுத்தப்பட்டன. தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமையினால் இந்நோய் பலரின் உயிரைப் பறித்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மக்கள் இறந்தும் போயுள்ளனர். இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டதையும், இறந்தமையையும் கண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்த சிகிச்சை நிபுணரான “எட்வேர்ட் ஜென்னர்” இந்நோய்க்கு எப்படியாவது […]
எளிமையும் எண்ணற்ற சத்துக்களையும் கொண்டது ஜம்பு. இதுவோர் முதல் இலை வரை பயன்படக்கூடியதும் மருத்துவ குணங்களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தினுடைய வரலாறு, பயன்கள் எப்படி நடுவது என்பவை பற்றிப் பார்ப்போம். ஜம்பு மரத்தின் வரலாறு முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே ”ஜம்பு” என்றழைப்பது போல் ஆங்கிலத்தில் இதனை றோஸ் அப்பிள் (Rose apple), பெல் பழம் (Bell fruit), றோயல் அப்பிள் ( […]
சில பறவைகள் பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்டமை. அவ் சந்தர்ப்பங்களில் அவை தம் இருப்பிடங்களை விட்டுச் சென்று எமக்கு முன்கூட்டியே அறியத்தருகின்றது. சுனாமி ஏற்படும் நாளுக்கு முன்பே சில பறவைகள் தமது இருப்பிடத்தை விட்டு பறந்து சென்று பேரழிவு ஏற்படப் போவதை எமக்கு அறியத்தந்துள்ளது. தொலைதூரம் பறந்து செல்லும் பறவைகளான பாடும் பறவையினங்களில் ஒன்றான பொன்னிறப் பறவைகள் இந்த இயற்கை அழிவுகளை வெகு சீக்கிரம் அறிந்துவிடும். இப்பறவைகள் இந்த ஏப்ரல் மாதம் தென்னளி பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட […]
எமது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் கூடியளவு அசைவுக்கு உட்படுவது கழுத்து ஆகும். எமது உடல் அவயவங்களுக்கும் மூல காரணியான மூளைக்கும் இடையில் அமைந்துள்ள தொடர்புபடுத்தும் அங்கம் கழுத்து ஆகும். இதில் ஏற்படுகின்ற வலி வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கின்றது. கழுத்துவலி என்பது சாதாரணமாக தட்டிக்கழிக்க கூடியாதொரு விடயமல்ல, ஏனேனில் மூளையிலிருந்து வருகின்ற நரம்புத் தொகுதியின் நரம்புத் திரட்டுகளும் இதயத்திலிருந்து மூளைக்கும் மற்றைய அவயவங்களுக்கும் குருதியைக் கொண்டு செல்கின்ற இரத்தக் குழாய்களும் ஒருங்கமைந்துள்ளமையால் அவற்றில் ஏற்படுகின்ற பாதிப்புக்களும் கழுத்து […]
பூச்சி இனங்கள் பல தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டவை. அதில் மின்மினிப் பூச்சியும் ஒன்றாகும். மின்மினிப் பூச்சிகளை பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அது எப்படி இந்த பூச்சி மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது உண்டு. மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்று அழைக்கிறார்கள், Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பூச்சி ஒளிர்வதற்கு காரணம் லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது […]
இன்றைய நவீன வாழ்க்கை முறையின் விளைவால் உலகை ஸ்தபிக்க வைக்கும் முக்கியமானதொரு நோயாக பாரிசவாதம் காணப்படுகின்றது. மூளைக்கான குருதிக்கலங்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவோ கசிவு காரணமாகவோ மூளையின் நரம்புக்கலங்களுக்கான குருதிச் சுற்றோட்டம் தடைப்படுவதால் ஏற்படும் பாரதூரமான விளைவாக பாரிசவாதம் காணப்படுகிக்றது. தேவையானளவு ஒட்சிசன் மற்றும் சத்துக்கள் கிடைக்காத நரம்புக்கலங்கள் நிரந்தரதொழிற்பாட்டை இழந்து இறந்துவிடுவதனால், அந்தக் கலங்களால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடுகளும் முற்றாக செயலிழந்துவிடுவதையே பாரிசவாதம் என்கின்றோம். இதன் விளைவாக உடற்தொழிற்பாடுகளில் முக்கியமான ஐந்து குழப்பங்கள் ஏற்படுகின்றது. 1. அசைவுகளை […]