You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October 4th, 2014

அண்மையில் இலங்கையிலே ஊடகங்களில் வெளியாகும் மால்மாக்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை மறைப்பதுடன் சில பிழையான சுகாதார தகவல்களையும் வளங்குவனவாகவுள்ளதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தால் குழந்தைகளிற்கு வழங்கக்கூடிய மிகவும் பாதுகாப்பானதும் அத்தியாவசியமானதுமான பால் தாய்ப்பாலே ஆகும். இதனாலேயே பிறந்து முதல் ஆறுமாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆறு மாதத்திற்கு பின்னர் மற்றைய உணவுகளை அறிமுகப்படுத்தப்படும் போதும் தாய்ப்பாலை இயன்றளவு தொடர்ந்தும் வழங்குதல் […]