You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2014
கொலஸ்ரோல் என்பது ஒரு வேதிக்கூட்டுப் பொருள். இது இயற்கையாக எமது உடலில் உருவாக்கப்படுகிறது. எமது உடலுக்குத் தேவையான கொலஸ்ரோலில் 80 வீதமானதை எமது கல்லீரல் உற்பத்திசெய்து விடுகிறது. மீதம் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படுகின்றது. கொலஸ்ரோல் நாம் உயிர் வாழ்தற்கு இன்றியமையாதது. ஆயினும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது தீங்கை ஏற்படுத்துகின்றது. நமது உடலில் கடத்தும் சாதனமாகத் தொழிற்படும் குருதியின் கொழுப்பானது புரதங்களுடன் இணைந்த நிலையில் பின்வருமாறு காணப்படுகிறது. L.D.L குறை அடர்த்திக் கொழுப்புப் புரத […]
மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜான் ஒ கீஃப், மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோர், தனிநபர்களின் இருப்பிடத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளைச் செய்யக் காரணமான மூளைச் செல்களின் கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாகப் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரும் தமது இருப்பிடத்தை புரிந்துகொண்டு, சிக்கலான ஒரு சூழலில் எவ்வாறு நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்பதை மூளையிலுள்ள அந்த செல்களே முடிவு செய்கின்றன என்று […]
முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது. இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும். ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா […]
இது தான் இவ்வருட உலக சிறுவர் தினத்துக்கான தொனிப் பொருள். உலக சிறுவர் தினம் இலங்கையில் ஒவ்வொரு வருடமும் ஒக்ரோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. எல்லோரும் சிறுவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது பாதுகாப்பாக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார்கள். சிறுவர்களின் பாதுகாப்பு எனக் கூறும் போது. அனைவராலும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் சிறுவர் தொழிலாளிகள் பற்றியும் அவற்றைத் தடுக்க வேண்டிய வழிகள் பற்றியும் பேசப்படுகிறது. அவற்றுக்கு மேலாக, எமது வீட்டிலேயே எம் சூழலிலேயே எம் குழந்தைகளையும் சிறார்களையும் சிறு சிறு […]
அண்மையில் இலங்கையிலே ஊடகங்களில் வெளியாகும் மால்மாக்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை மறைப்பதுடன் சில பிழையான சுகாதார தகவல்களையும் வளங்குவனவாகவுள்ளதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தால் குழந்தைகளிற்கு வழங்கக்கூடிய மிகவும் பாதுகாப்பானதும் அத்தியாவசியமானதுமான பால் தாய்ப்பாலே ஆகும். இதனாலேயே பிறந்து முதல் ஆறுமாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆறு மாதத்திற்கு பின்னர் மற்றைய உணவுகளை அறிமுகப்படுத்தப்படும் போதும் தாய்ப்பாலை இயன்றளவு தொடர்ந்தும் வழங்குதல் […]