You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August 30th, 2014

மனிதன் ஆரோக்கிய வாழ்விற்கு இசையானது பலவழிகளிலும் உதவதை பல ஆராச்சிகள் உறுதிசெய்துள்ளது. மன அழுத்தத்ததையும், மனபதந்நத்தையும் குறைப்பதற்கும் இசை உறுதுணையாக இருப்பதுடன் பல நோய்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கும் இசை பயன்படும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் செய்யப்பட் ஆய்வுகளின்படி இசைப்பயிற்சி இளையவர்களிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவரையும், உங்களையும் பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். கடித்த பாம்பினை நன்கு அடையாளம் காணமுயலுங்கள். இதனால் எவ்வகையான பாம்பு என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும். பாம்பை இனங்காணுவதில் அதிக நேரத்தை செலவழிப்பதையோ அல்லது அம்முயற்சியில் மீண்டும் கடிவாங்குவதையோ தவிர்க்கவும். பாம்பினால் தீண்டப்பட்டவரைக் குறைந்த அசைவுடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும். அத்துடன் கடிக்கு இலக்கான நபரை அமைதியாக வைத்திருக்கவும். (அதிக அளவு அசைவும் மன உளைச்சல், அதிர்ச்சி என்பன இரத்த ஒட்டத்தை […]