You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August 15th, 2014

கடந்த வாரம் நாம் எவ்வாறு சரியான உணவுகளை பிழையின்றி தெரிவு செய்வது? எனும் தலைப்பின் கீழ் ஒரு அறிமுகக்கட்டுரையை பார்த்தோம். இந்த வாரத்திலிருந்து இனிவரும் வாரங்களில் ஒவ்வொரு அறிவுறுத்தல்களையும் விரிவாக பார்ப்போம். 1. பலவகையான உணவுகளை தினமும் உணவிற்காக எடுத்துக் கொள்வோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவானது ஆறு உணவுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தினமும் எல்லா உணவுப்பரிவில் இருந்தும் அவசியமான அளவுகளில் உணவுகளை உள்ளெடுப்பதன் மூலம் எமக்கு ஒவ்வொரு நாளும் தேவையான சகல போஷனைக்கூறுகள் ( மாப்பொருள், புரதம், […]

உலகை அச்சுறுத்திவரும் இபோலா எனப்படும் வைரஸ் தொற்று மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஏனைய நாடுகளிற்கு பரவி வருகின்றது. இந்நிலையில் 2014 பங்குனி மாதத்திலிருந்து தற்போது வரை 1000இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டும் அதில் 700இற்கும் மேற்ப்பட்ட இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு. இரத்தம், வியர்வை, போன்ற உடற்திரவங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் புழுங்கிய இடங்கள் மற்றும் பொருட்களின் வழியாகவும் இக்கிருமி பரவுகின்றது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தோன்றும் இவ்வைரசு […]

உலக தாய்ப்பாலூட்டும் வாரம் ஆவணி 1-7, 2014 World Brest Feeding week 2014 – Aug 1-7 Brest Feeding : A winning Goal For LIFE தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் கருதி இந்த வருடமூம் ஆவணி 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரம் அனுஷ்டிக்ப்படுகின்றது. இந்த வருடத்தின் தொனிப்பொருள் பின்வருமாறு அமைகின்றது. “தாய்ப்பாலூட்டல் வாழ்விற்கான ஒரு வெற்றி தரும் இலக்கு” ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பாலூட்டலை பிறந்ததிலிருந்து வெற்றிகரமாக வழங்கும் […]