You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August 1st, 2014

வயது மூப்படையும் போது சிலரில் கூனல் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக் கூனல் ஏற்பட ஒஸ்டியோபொரசிஸ் என்னும் நோய் நிலைமையே காரணமாகும். ஒஸ்டியோபொரசிஸ் எனும் நோய் எலும்புகளின் அடர்த்தி குறைவதையே குறிப்பிடுகின்றது. இந்நோய் மூப்படையும் போது தானாகவே அல்லது வேறு நோய்களின் அல்லது தொடர்ச்சியான சில குறித்த மருந்துப்பாவனைகளின் விளைவாகவோ ஏற்படலாம். இந்நோய் நிலைமையால் எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மை அதிகரிக்கிறது. இதனால் பொதுவாக முள்ளந்தண்டு எலும்புகளே உடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. இந்நோய் வயது முத்தவர்களிடம் […]

உரைப்படை தேவையான பொருட்கள் சோயா 200g உழுத்தம் பருப்பு 200g பயறு 200g பெருஞ்சீரகம் தேவையானளவு செத்தல் மிளாகய் 200 தேவையான அளவு பெருங்காயம் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை சோயா, உழுத்தம் பருப்பு,பயறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து ஊறவைத்து பின்பு பெருஞ்சீரகம், பெருங்காயம், உப்பு செத்தல் மிளகாய் போன்றவற்றை தேவைக்கேற்ப சேர்த்து அரைத்தல் வேண்டும். அக்கலவையை ஒன்றாக்கி நன்கு கலத்தல் பின்னர் அக் கலவையை சிறிது நேரம் கழித்து தோசையாக சுடுதல். […]

இலங்கையில் பல வகையான பழங்கள், மரக்கறி வகைகள், தானியங்கள் மற்றும் வெவ்வேறு உணவு வகைகள் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடியதாக இருப்பினும், நாம் உயர்ந்தளவு ஆரோக்கியம் சார் சுட்டிகளை அடைந்திருப்பினும், இலங்கையர்களின் போசாக்கு மட்டமோ அன்றி போசாக்கு சார் சுட்டிகளோ ஏனைய நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் திருப்தி அளிக்கக் கூடிய வகையிலோ அல்லது மகிழ்ச்சி அடையக் கூடியதாகவோ இல்லை. எங்களுடைய நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 16.6 வீதமானவர்கள் குறைந்த பிறப்பு நிறையுடையவர்களாக இருப்பதுடன், கர்ப்ப காலத்தின்போது […]