You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July 11th, 2014

Scabies என்பது Sarcoptes scabbier என்கின்ற உண்ணியால் ஏற்படுகின்ற தோல்கடி நோயாகும். இவ்உண்ணியானது எமது தோலினை ஊடுருவி தோலின் கீழாக முட்டையினை இடுகின்றது. இதனால் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது. நோய்அறிகுறிகளாவன கடுமையான கடி(அதிகமாக இரவுப்பொழுதில்) தோழ் தடிப்படைதல் சிறுபருக்கள் புண் என்பன ஏற்படலாம். முதல் தடவையாக இவ் உண்ணியால் பாதிக்கப்படின் 4 – 6 கிழமைகளின் பின்னரே நோய் அறிகுறிகள் ஏற்படும். தோலில் ஏற்படுகின்ற தடிப்புகள் (Skin rashes) மற்றைய நோய் அறிகுறிகளுடன் ஒருமைப்பட்ட தன்மையைக் காட்டும். தோல்கடியானது […]

உடலின் ஒருசீர்த்திடனிலையின் ஒரு அங்கமே வெப்பச்சீராக்கல், சாதாரண உடல் வெப்பச்சீராக்கலில் வியர்வைச் சுரப்பிகளின் பங்கும் குறிப்பிடத்தக்களவில் அமைகின்றது. சாதாரண உடல்வெப்பச்சீராக்கலுக்கு மேலதிகமாக சிலரில் அதிகமான வியர்வை சுரக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு அதிக வியர்வை வெளியேற்றம் உடையோர் உளவியல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்டுகின்றனர். நாளாந்த வேலைகளில் நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக எழுதுகருவியை தொடர்ந்து பிடிப்பதில் கூட சிரமத்தைச் சந்திக்கின்றனர். அது மட்டுமன்றி அதிக வியர்வை ஏற்படும் இடங்களில் பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்படுவதனாலும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். […]

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘லான்ஸட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதிக எடை உள்ளவர்கள் அல்லது பருமனானவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது. இந்த […]

சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம் பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளில் ஒரு சிறப்பு முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு கணினியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முப்பரிமாண கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் உடனுக்குடன் கணினிக்கு சென்று, அந்த கணினியில் இருந்து இந்த காட்சிகள் மீண்டும் இந்த சிறப்புக் கண்ணாடியில் […]