You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July 3rd, 2014

அல்சைமர்ஸ் எனப்படும் ஞாபக மறதி நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் நியூயோர்க்கில் மவுண்ட் சினெய்யிலுள்ள மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வொன்றில் கொக்கோ சாற்றின் மூலம் இந்நோயை தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான ( natural, ditched, lavado) கொன்கோ மாதிரிகள் எலிகளில் பரிசோதிக்கப்பட்ட போது lavado ( Minimally processessed cocoa extract) கொக்கோ சாறானது அல்சைமர்ஸ் நோயை தடுப்பதற்கான மிகச்சிறந்த பதார்த்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எலிகளின் மூளையில் AB […]

ஓர் புதிய குடும்பமானது திருமண பந்தத்தின் மூலம் உருவாகின்றது. அந்த வகையில் அழகான குடும்பமொன்றை உருவாக்குவதற்கு தகுந்த வயதில் திருணம் செய்து கொள்வது அவசியமாகும். அத்துடன் குடும்பமொன்றை நிர்வகிப்பதற்கு தேவையான கல்வியறிவையும் பொருளாதார வசதியினையும் ஈட்டிக்கொள்ளவும் வேண்டும் பெண்ணின் கருத்தரிக்க சிறந்த வயது எல்லை 18 தொடக்கம் 35 வயது வரையாகும் அதற்கேற்ற வகையில் திருமண வாழ்க்கையினை ஆரம்பித்தல் சிறந்ததாகும். திருமணத்தின் பின்னான முக்கிய தீர்மானம் முதற் குழந்தைபற்றியதாகும். குழந்தையின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அக்குடும்பத்தின் உடல் உள […]

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியமிகப் பொதுவான தொற்று நோய்களாக சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் அமைவதை பெரும்பாலான பெற்றோர் அவதானித்திருப்பார். அவர்களுக்கு தோன்றும் கேள்வி இதுதான், “ஏன் எனது குழந்தைக்கு அடிக்கடி சளிக்காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படுகின்றது?” உலக சுகாதார நிறுவனத்தினதும் (WHO) UNICEF இனது தகவலின் படி குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 27 சதவீதமாக சுவாசத் தொற்று நோய்களும் (சளிக்காய்ச்சல்) 23 சதவீதமாக வயிற்றோட்ட நோய்களும் காணப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.8 மில்லியன் குழந்தைகள் […]