You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July, 2014
தூக்கம் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாததும், தவிர்க்கமுடியாததும் அத்துடன் ஒரு இயற்கையான நிகழ்வும் ஆகும். இது நலமான வாழ்வுக்கும் சுகமான ஆரோக்கியத்துக்கும் அவசியம். ஒருவர் எத்தனை மணிநேரம் படுக்கையிற்படுத்து இருக்கிறார் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு நேரம் நன்றாகத் தூங்குகிறார் என்பது தான் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தின் பயன்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். 1. பகலில் அதிகவேலை செய்த தசைகள் நரம்புகளுக்கு ஒய்வை அளிக்கிறது. 2. உடலில் அதிக சக்தியை சேமிக்க உதவுகிறது. 3. இரவு நேர உடல் வளர்ச்சி […]
பொதுவாக இலங்கையின் பலபகுதிகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே மருந்துகளை வாங்கி பாவிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அண்டிபயோரிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. அனாவசியமாக அண்டிபயோரிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் நோய் எதிர்ப்ப சக்தி பாதிக்கப்பட்டு அவர்களின் உடல்நலம் கெடுகிறது. அத்துடன் ஏனைய தொற்றுக்கரிருமிகளின் பெருக்கத்திற்கும் வழிசெய்கின்றது. எனவே மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் தாமாக மருந்து வகைகளை வாங்கிப் பாவிப்பதை்த தவிர்க்க வேண்டும் […]
இனிக்கும் சர்க்கரை ஆரோக்கியத்தை கசக்கச் செய்யும். நாம் உண்ணும் உணவிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம். அந்த கலோரி கணக்கின் படி தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை சீனி அளவானாலும் பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சீனியானாலும் ஒட்டுமொத்த சீனியின் அளவு 20 கிராம் அதாவது 5 தேக்கரண்டிகளாக குறைக்கப்படவேண்டும் என தற்போது பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆசோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் ஒருவரின் உணவில் சீனியின் அளவு […]
“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்பதன் உண்மையை நாம் எம்முன்னோர்களிடமிருந்தும், அனுபவ ரீதியாகவும் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நஞ்சு அன்று கொல்லும் சோடா நின்று கொல்லும் என்ற விடயம் எம்மில் பலருக்குத் தெரியாது. சோடா சக்தி தரும் ஒர் ஆரோக்கிய பானம் என்று நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கின்றோம். பெருகிவரும் சோடா குடிக்கும் பழக்கம் சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகப் பல சுகதேகிகள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு ஆளாகிவருகின்றார்கள். சோடா குடிப்பதால் […]
அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம் என்பது ஏறக்குறைய முற்றிய நிலையில் இருக்கும். எனவே அதை கட்டுப்படுத்துவதோ குணப்படுத்துவதோ இயலாத காரியம். எனவே இந்த அல்சைமர்ஸ் ஒருவரை தாக்குமா என்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடிந்தால் அதன் அடுத்தகட்டமாக அல்சைமர்ஸ் நோய்க்கான மருந்தை […]
எவ்வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக மலச்சிக்கல் காணப்படுகின்றது. ஒருவர் தனது வழமைக்கு அதிகமான நாட்கள் மலங்கழிக்கமுடியாமல் இருக்கும் போதோ அல்லது மிகக் கடினமான மலத்தை கழிக்கும்போதோ அல்லது முழுமையாக மலங்கழிக்க முடியாமல் இருக்கும் போதும் மலச்சிக்கல் எனக் கருதப்படுகின்றது. இன்றைய நவீன வாழ்க்கை முறையே அதாவது போதியளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, போதியளவு நீர் குடிக்காமை, போதியளவு உடற்பயிற்சியின்மை மற்றும் மலங்கழிக்க வேண்டிய தேவை ஏற்படுமிடத்து அதனை பிற்போடுதல் போன்றவையே மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்களாகும். உளவியல் […]
Scabies என்பது Sarcoptes scabbier என்கின்ற உண்ணியால் ஏற்படுகின்ற தோல்கடி நோயாகும். இவ்உண்ணியானது எமது தோலினை ஊடுருவி தோலின் கீழாக முட்டையினை இடுகின்றது. இதனால் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது. நோய்அறிகுறிகளாவன கடுமையான கடி(அதிகமாக இரவுப்பொழுதில்) தோழ் தடிப்படைதல் சிறுபருக்கள் புண் என்பன ஏற்படலாம். முதல் தடவையாக இவ் உண்ணியால் பாதிக்கப்படின் 4 – 6 கிழமைகளின் பின்னரே நோய் அறிகுறிகள் ஏற்படும். தோலில் ஏற்படுகின்ற தடிப்புகள் (Skin rashes) மற்றைய நோய் அறிகுறிகளுடன் ஒருமைப்பட்ட தன்மையைக் காட்டும். தோல்கடியானது […]
உடலின் ஒருசீர்த்திடனிலையின் ஒரு அங்கமே வெப்பச்சீராக்கல், சாதாரண உடல் வெப்பச்சீராக்கலில் வியர்வைச் சுரப்பிகளின் பங்கும் குறிப்பிடத்தக்களவில் அமைகின்றது. சாதாரண உடல்வெப்பச்சீராக்கலுக்கு மேலதிகமாக சிலரில் அதிகமான வியர்வை சுரக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு அதிக வியர்வை வெளியேற்றம் உடையோர் உளவியல் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்டுகின்றனர். நாளாந்த வேலைகளில் நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக எழுதுகருவியை தொடர்ந்து பிடிப்பதில் கூட சிரமத்தைச் சந்திக்கின்றனர். அது மட்டுமன்றி அதிக வியர்வை ஏற்படும் இடங்களில் பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்படுவதனாலும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். […]
உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘லான்ஸட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதிக எடை உள்ளவர்கள் அல்லது பருமனானவர்கள் என்று கருதலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது. இந்த […]
சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம் பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளில் ஒரு சிறப்பு முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு கணினியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முப்பரிமாண கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் உடனுக்குடன் கணினிக்கு சென்று, அந்த கணினியில் இருந்து இந்த காட்சிகள் மீண்டும் இந்த சிறப்புக் கண்ணாடியில் […]