You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June 20th, 2014

நோயுற்றவர்கள் நோய்காரணமாகவும், பல வசதிக்குறைவுகள் காரணமாகவும், உரிமைமீறல்கள் அல்லது அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாமை காரணமாகவும் அவமதிப்புக்கள் காரணமாகவும் ஆதரவின்மை, பாரமரிப்பு போதாமை போன்ற காரணங்களினாலும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு வைத்தியசாலை மட்டங்களிலும், சமுதாய மட்டங்களிலும் பல பரந்துபட்ட நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றது. இதன் மூலம் பல தவறான புரிந்துணர்வுகளையும் நிவர்த்தி செய்ய முடியும். நோயுற்றவர்களும் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தம்மாலாக முயற்சிகளை எடுப்பதற்கு முயலவேண்டும். ஒருவர் தொழில்புரியும் இடத்தில் காணப்படும் அபாயநிலமை காரணமாக […]

இயந்திரமயமாக்கப்பட்ட நவீன உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வாழ்க்கைப் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கும் மனிதர்களின் தமக்கான உலகமாக திகழ்வதே குடும்பமாகும். ஒர் சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் இருப்பது குடும்பமே. கருக்குடும்பங்களே நம் சமூதாயக்கட்டமைப்பில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வகையில் அக்குடும்பத்தினை திட்டமிட்டு அழகானதும் அளவானதுமாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாம் இருவர் நமக்கு இருவர் எனும் நாகரிகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலே மேலும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியும் ஆரோக்கியமும் படைத்தவர்கள் மேலும் குழந்தைகளைப் பெறுவதன் மூலம் அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் […]

விசர்நாய்க்கடியினால் உலகளாவிய ரீதியாக ஒவ்வொரு வருடமும் 55000 மக்கள் இறக்கின்றார்கள். 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் 55 மரணங்கள் விசர்நாய்க்கடியினால் ஏற்ப்பட்டுள்ளது. விசர்நாய்க்கடியினால் ஏற்படும் மரணம் 100வீதம் தடுக்கப்படக்கூடியதே. விசர்நாய்க்கடி நோயானது ரேபீஸ் (Rabies) எனும் வைரசின் மூலம் ஏற்படுகின்றது. இவ் வைரசானது மனிதனின் நரம்புத்தொகுதியை செயலிழக்கச் செய்வதன் மூலமே மரணத்தை விளைவிக்கின்றது. இது விலங்குகளின் மூலம் பரவப்படும் ஒருநோயாகும். இவ்வைரசானது முலையூட்டிகளில் இந்நோயை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் மனிதன் மற்றய முலையூட்டிகளிடமிருந்து இவ்வைரசினை விபத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றான். […]

எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு […]

கைத்தொலைபேசிகள் தற்போது மனிதனின் அன்றாட செயற்பாடுகளிற்கு இன்றியமையாத ஒரு சாதனமாக மாறியுள்ளது. பொதுவாக இதனை காற்சட்டைப் பைகளில் வைத்திருக்கும் பழக்கமே காணப்படுகின்றது. மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து […]