You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June 13th, 2014

ஒருவன் நோய்வாய்ப்பட்டுவிட்டான் என்பதற்காக அவனிற்கு இருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மீறிச் செயற்படுவது மனிதத்துவம் ஆகாது. அந்தவகையிலே நோயுற்றவர் தனது சொந்த விருப்பப்படி நடந்துகொள்ளும் உரிமையும் மதிக்கப்படவேண்டும். நோயுற்ற ஒருவர் மருந்தை பாவிக்காமல் இருப்பதற்கு விருப்பப்படலாம், சத்திரசிகிச்சை செய்யாமல் இருக்க விரும்பலாம், தொடர்ந்து புகைப்பிடிப்பதற்கு விருப்பப்படலாம் உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய சோதனைகளை செய்யாமல் விடுவோம் என்று நினைக்கலாம், தொடர்ந்து குடிவகைகள் பாவிக்க ஆசைப்படலாம், வேறோரு மருத்துவரின் இரண்டாவது அபிப்பிராயத்தை கேட்க விரும்பலாம், கோயிலுக்குச் சென்று சில சமயப்பெரியவர்களின் […]

இலங்கையில் சிகரெட் பெட்டிகளின் மேற்பரப்பில் 80 வீதமான பகுதியை உள்ளடக்கி நோய் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், சிகரெட் பெட்டிகளின் 50 முதல் 60 வீதமான மேற்பரப்பில் மட்டும் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் சிகரெட் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் புகைத்தலினால் ஏற்படுகின்ற அபாயங்களை சிகரெட் பெட்டிகளின் 80 வீதமான மேற்பரப்பில் எச்சரிக்கைப் படங்களாக பிரசுரிக்க வேண்டும் என்று அரசு அண்மையில் […]

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றி விஞ்ஞானிகள் கவலைகொண்டுள்ள நிலையில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்ற தேனீ இனத்தை பாதிக்காமலேயே தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டுபிடித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ‘புனல்‘ வடிவத்தில் வலைபின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்ஸின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய இரசாயன மூலக்கூற்றை இந்த பூச்சிக்கொல்லி மருந்து கொண்டிருக்கிறது. செயற்கை இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பான மாற்றாக இந்த இயற்கை வழி பூச்சிக்கொல்லி பயன்படக்கூடும் என […]