You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2014

உலக சனத்தொகையில் சராசரியாக ஏழு தம்பதியரில் ஒருவருக்கு மக்பேறு தாமதடைதல் என்னும் நிலைமை காணப்படுகின்றது. மகப்பேறு தாமதடைதல் என்பது ஒழுங்கான, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் தம்பதியரில் ஒரு வருடமாகியும் கருத்தரித்து மகப்பேறடைய முடியாத ஒரு நிலைமையாகும். ஒருதடவை கூட கருத்தரிக்கவில்லையெனின் அடிப்படை மகப்பேற்றின்மை எனவும், முன்னர் கருத்தரித்திருப்பின் இரண்டாந்தர மகப்பேறின்மை எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மகப்பேறுதாமதமடைதலுக்கு ஆண் அல்லது பெண் அல்லது இருவருமே காரணமாக இருக்கலாம். சாதாரண கருத்தரிப்புக்கு அவசியமானவை I.ஆரோக்கியமான விந்து பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியை அடைதல் […]

22 சலரோகமும் மன அழுத்தமும். சலரோகமும் மன அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளன. மன அழுத்தத்தை முற்றாக அகற்ற முடியா விட்டாலும் அதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். ஒழுங்கான உடற்பயிற்சி சத்துள்ள உணவு, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம், தளர்வாகும் செயன்முறைகள் என்பன மன அழுத்தத்தைக் குறைக்கக உதவும். மனத்தைத் தளர்வுபடுத்தும் எளிய முறைகள். எதிர்பார்ப்புகளின் உண்மைத் தன்மையைக் கொண்டிருங்கள். ஆழ மூச்செடுங்கள் நண்பர்கள், வைத்தியர்கள் உளவளத் துணையாளர்களிடம் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். உடற்பயிற்சி எதிர்மறையான எண்ணங்களை விலக்குங்கள் […]

நோயுற்று அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நிற்கும் மனிதர்களின் உரிமைகளை் மதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எம் அனைவரது மனங்களிலும் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகிலே மனித உரிமை மீறல்கள் பற்றி அடிக்கடி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே மேலைத்தேச நாடுகளிலே விலங்குரிமை பற்றிக்கூட கரிசனை காட்டப்பட்டு வருகின்ற நிலையில் எமது நோய் வாய்ப்பட்ட மக்களின் உரிமை மீறல்கள் பற்றி நாம் சிந்திக்கத்தவறுவது நியாயமாகாது. பொது மக்களுக்கு மட்டுமல்ல மருத்துவத்துறையினருக்கும், பத்திரிகைத்துறையினருக்கும், அரசு தரப்பு அதிகாரிகளுக்கும், ஏன் காவல்துறையினருக்கும் […]

3. சமூகசேவைகளும் பொருளாதார உதவிகளும்…. உங்கள் பிரதேசத்தின் பிரதேச சபை செயலர், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் பின்வருவனவற்றில் உதவி செய்வார்கள். மருத்துவ உதவி சமூகசேவைகள் திணைக்களத்தில் இருந்து தேவைப்படுகின்ற ஆவணங்கள் நிதியுதவிக்கான விண்ணப்பக் கடிதம் மருந்துக் கொள்வனவுக்கான மருந்துச் சிட்டை ஓசுசலவிலிருந்து அல்லது 3 தனியார் மருந்துச் சாலைகளிலிருந்து பெற்ற மருந்துக்கான திட்டம் வைத்தியசாலைக்குப் பிரயாணிக்க ஒருமாதத்திற்கான செலவு. வழங்கக்கூடிய மிகக் கூடிய தொகை ரூபா 10,000 இலிருந்து ரூபா 20,000 வரை. சிறுவர் நல பாதுகாப்பு […]

சிறுபிள்ளைகளில் ஏற்படும் உடற்பருமனடைதலானது உலக அளவிலேயே பாரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. தொற்றாத நோய்களில் ஒன்றாக கருதப்படும் உடற்பருமனடைதல் கடந்த சில தசாப்தங்களாக பெருமளவில் அதிகரித்து வருகின்றது. பிள்ளையின் உடற்திணிவுச் சுட்டியானது (பிள்ளையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேட்டிலுள்ள வரைபுக்கமைய) 98வது சென்ரலை(98th centile) விட அதிகமாக உள்ள போது உடற்பருமனடைதல் நோயாகவும் 85வது சென்ரைலை(85th centile) விட அதிகமாக உள்ள போது அதிக எடையுள்ள பிள்ளையாகவும் கருதப்படும். உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவுக்கும், செலவிடப்படும் கலோரியின் அளவிற்கும் இடையில் […]

21.3 சிறந்த உடல்நலத்தைப் பேண உதவுகின்ற உளநல – சமூக உதவிகள் 1 சுகநல உத்தியோகத்தர்கள் இலங்கையில் பல்வேறுபட்ட நிலைகளில் சலரோகச் சிகிச்சை முறைக்கான உதவிசெய்யும் உத்தியோகத்தர்கள் உள்ளனர். 2.கல்வி பிள்ளையின் மிகக் கட்டுப்பாடான நோய் நிலைமை பிள்ளையின் நுண்ணறிவையோ பாடசாலைப் பெறுபேறுகளையோ பாதிக்கக் கூடாது. சலரோகம் என்பது பாடசாலையில் ஒழுங்கற்ற வரவுக்கு ஒரு காரணமல்ல பெற்றோர்களுக்கான உபயோகமான அறிவுரைகள். அவசர நிலைமைகளில் உங்களைத் தொடர்புகொள்ளும் விதத்தைப் பாடசாலைக்கு தெரிவியுங்கள். சலரோகம் பிள்ளையின் கல்வியியல் […]

இறுதியாகக் கிடைத்த பல்வேறு தகவல்களின் படி சுற்றாடல் வேகமாக வெப்பமடைந்து வருவதனால், கடல்நீர் ஆண்டுதோறும் 3 – 10mm வரை உயர்ந்து வருவதாகவும், நிலத்தடி நீர் அதிகமாக உறுஞ்சி எடுத்துப் பாவிக்கப்படுவதால் நீர்மட்டம் ஆண்டுதோறும் 6 – 100mm என்ற வேகத்தில் அமிழ்ந்து வருவதாகவும் கண்டறிப்பட்டிருக்கின்றது. இதனால் இலங்கையின் உயரம் குறைவான கரையோரப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு சுற்றாடல் வெப்பமடைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும், நிலத்தடி நீர் மேலதிகமாக […]

“குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வம் அருளப் பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போல பேண வேண்டியது அவர்களின் கடப்பாடாகும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையை எப்போதும் கண்காணிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏற்ற ஆபத்துக்களற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். தற்காலத்தில் குழந்தை மருத்துவ விடுதிகளில், தவறுதலாக நச்சுப் பதார்த்தங்களை உட்கொண்டு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுகின்றது. பெற்றோரிடம் அல்லது […]