You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 16th, 2014

22 சலரோகமும் மன அழுத்தமும். சலரோகமும் மன அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளன. மன அழுத்தத்தை முற்றாக அகற்ற முடியா விட்டாலும் அதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். ஒழுங்கான உடற்பயிற்சி சத்துள்ள உணவு, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம், தளர்வாகும் செயன்முறைகள் என்பன மன அழுத்தத்தைக் குறைக்கக உதவும். மனத்தைத் தளர்வுபடுத்தும் எளிய முறைகள். எதிர்பார்ப்புகளின் உண்மைத் தன்மையைக் கொண்டிருங்கள். ஆழ மூச்செடுங்கள் நண்பர்கள், வைத்தியர்கள் உளவளத் துணையாளர்களிடம் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். உடற்பயிற்சி எதிர்மறையான எண்ணங்களை விலக்குங்கள் […]

நோயுற்று அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நிற்கும் மனிதர்களின் உரிமைகளை் மதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எம் அனைவரது மனங்களிலும் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகிலே மனித உரிமை மீறல்கள் பற்றி அடிக்கடி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே மேலைத்தேச நாடுகளிலே விலங்குரிமை பற்றிக்கூட கரிசனை காட்டப்பட்டு வருகின்ற நிலையில் எமது நோய் வாய்ப்பட்ட மக்களின் உரிமை மீறல்கள் பற்றி நாம் சிந்திக்கத்தவறுவது நியாயமாகாது. பொது மக்களுக்கு மட்டுமல்ல மருத்துவத்துறையினருக்கும், பத்திரிகைத்துறையினருக்கும், அரசு தரப்பு அதிகாரிகளுக்கும், ஏன் காவல்துறையினருக்கும் […]