You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2014
நார்ச்சத்துக் கூடிய உணவுகளான இலைவகைகள், கீரைவகைகள், மரக்கறி வகைகள், பழவகைகள், தவிட்டுத்மையுடைய தானிய உணவுகள், கௌப்பி, பயறு, போன்ற அவரை வகை உணவுகள் மனிதனில் பல வகையான நோய்கள் ஏற்படும் வீதத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கின்றது. மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு […]
ஒருவரின் உரிமைகளை இன்னொருவர் மதித்து நடக்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான சமுதாயம் உதயமாகும் அந்த வகையில் நோயுற்று இருக்கும் ஒருவரின் உரிமைகள் என்ன? அது மீறப்படுவதை தடுப்பதற்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. நோயாளர்களின் உரிமை மீறல்களையும் உரிமைப்போராட்டத்தையும் பல பரிவுகளாக எடுத்து ஆராயமுடியும். முதலாவதாக நோயுற்றவரின் நோய்நிலை சம்பந்தமான தகவல்கள் பிறருக்கு தெரியாதவாறு இரகசியமாகப் பேணப்படுகின்றனவா?” என்ற வினாவை முன்வைத்தால் அதற்கு இல்லை என்பதே பதிலாக வருகின்றது. […]