You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2014

நீடுழி வாழ தினமும் ½ Kg மரக்கறி, பழவகைகள் உண்ண வேண்டும். மரக்கறி பழவகைகளை தினமும் உண்பதன் மூலம் சலரோகம், உயர்குருதி அமுக்கம், அதிகரித்த கொலஸ்ரோல் என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ […]

உலகின் பல பகுதிகளில் பருவநிலைகளில் மாற்றம் ஏற்படப் போகிறது. முன்னைய பருவ நிலை மாற்றங்களையும், தற்போது எற்பட்டு வருகின்ற பருவநிலை மாற்றங்களையும் அவதானிக்கும் போது இவற்றுக்கிடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதை எம்மால் அவதானிக்க முடியும். எமது பிரதேசத்துப் மழைவீழ்ச்சி, சுற்றாடல் வெப்பநிலை என்பவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எமது பிரதேசத்தில் மட்டுமென்றி உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருவதை பல நிறுவனங்கள் உறுதிசெய்து வருகின்றது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன […]

குளுக்கோமா என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தி நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற மிக முக்கிய பிரச்சினையாகும். 2010 ம் ஆண்டில் பார்வை இழப்பு ஏற்ப்பட்டவர்களில் 8வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம். பார்வை குறைபாடு ஏற்பட்டவர்களில் 2வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம். உலகளாவிய ரீதியில் 1990 தொடக்கம் 2010 வரையான ஆண்டுகளில் குளுக்கோமா நோயாளர்களின் எண்ணிக்கை முன்னையதை விட ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணியாகவும் இருக்கின்றது. குளுக்கோமா என்பது […]