You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2014

இரத்த வெல்லம் குறைகின்ற நிலமை இரத்த வெல்லத்தின் அளவு 72mg/dl(4mmol/l) இலும் குறைகின்ற நிலமையே இதுவாகும் ஆனால் சில பிள்ளைகள் இதைவிடக் கூடிய வெல்ல மட்டத்திலேயே நோயறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். ஏன் இரத்தத்தில் வெல்ல மட்டம் குறைகின்றது அதிகளவு இன்சுலின் எடுத்தல் உணவு அல்லது சிற்றுணவைத் தவற விடுதல் அல்லது குறைவான அளவு உண்ணுதல் பிள்ளை வழமையை விட அதிகளவு விளையாடுதல் அல்லது தொழிற்படுதல் இவ்வாறான நிலைமையில் என்ன நடைபெறும்? எவ்வாறு இதனை அடையாளங்கண்டு கொள்ளலாம்? வெல்லம் இரத்தத்தில் […]

மூளை முதுமை நோய் அல்லது ஞாபகமறதி நோய் என்று சொல்லப்படுகின்ற Dementia நோயாளர்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் 4 கோடிகளையும் தாண்டி வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த நோயாளர்களின் பராமரிப்புக்காக மொத்தச் செலவு 7.5 பில்லியன் இலங்கை ரூபா. இது உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியின் 1 வீதம் ஆகும். இதன் தாக்கங்களை சமாளித்துக் கொள்வது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாட்டிற்கு ஒரு பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றது. டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இருபது […]

சரியான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படாத நீரிழிவு நோயினால் உடலின் பல்வேறு அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் குருதிக்கலன்கள் சிறுநீரகங்கள், கண்கள், மூளை, நரம்புகள், கால்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர்குருதிக்குளுக்கோஸ் காரணமாக சிறுநீரகத்திலுள்ள சிறிய குருதிக்கலன்கள் (மயிர்த்துளைக்குழாய்கள்) பாதிப்படைகின்றன. இதனால் அல்புமின் எனப்படுகின்ற ஒரு வகையான குருதியிலுள்ள சிறிய புரதமானது சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. (24 மணித்தியாலத்திற்கு 30mg இற்கு குறைவாக) ஒரு நாளில் […]
நீரிழிவு நோயானது எமது உடலின் சகல உறுப்புக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நீரிழிவு நோயினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய் ஏற்பட்டு 10 – 20 ஆண்டுகளின் பின்னரே பொதுவாக விழித்திரைப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எணினும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் விழித்திரைப் பாதிப்புக்கள் இதற்கு முன்னரே ஏற்படுகின்றது. 2030ம் ஆண்டு நீரிழிவு விழித்திரைப் பாதிப்புக்கள் காணப்படுவோரின் எண்ணிக்கை 440 மில்லியனாகக் காணப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. இது 2010 […]