You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April 26th, 2014

19 உளரீதியான துணை வழங்குதல். எல்லா வைத்தியசாலைகளிலும் எந்நேரமும் உளவளத்துணை கிடைக்கின்றது. நீங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் விரும்பிய பொழுது இதை பெற்றுக் கொள்ள முடியும். 20 உங்கள் பிள்ளையின் தொடர்ச்சியான சிகிச்சை வசதிகள் எங்கே கொள்ளப்படும்? உங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள குழந்தை வைத்திய நிபுணரின் சேவை வழங்கப்படும் வைத்தியசாலையில் இது நடைபெறும். நீங்கள் விரும்பினால் ஒழுங்கான காலஇடைவெளிகளில் சீமாட்டி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கும் வருகைதர முடியும். 21 சலரோகத்துடன் வெற்றிகரமாக வாழுதல். சலரோகமுள்ள பிள்ளை இருப்பது […]

பழங்களை தினமும் உண்டு வந்தால் வகை 2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, […]

01. எனது குருதிக்குளுக்கோஸ் மிகக் குறைவாக செல்லக்கூடுமா? ஆம் நீங்கள் உங்களுடைய உணவினை அல்லது சிற்றுண்டியை சரியான வேளையில் எடுக்காதிருந்தால் உங்கள் குருதிக் குளுக்கோஸ் மிகக்குறைந்த நிலையை அடையமுடியும். இது குளுக்கோஸ் குறைந்த நிலை ( Hypoglycaemia) என அழைக்கப்படும் நீங்கள் நீரிழிவைக்கட்டுப்படுத்த இன்சுலின் சிகிச்சை அல்லது சிலவகை மருந்துகள் பாவிப்பவராயின் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நீரிழிவுக்காக உணவுக்கட்டுப்பாட்டுச் சிகிச்சையை மாத்திரம் மேற்கொள்பவராக இருந்தால் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு […]