You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April 19th, 2014

14. சலரோக கீற்றோன் அமிலநிலை (Diabetic Ketoacidosis) இந்நிலைமையை எப்போது சிந்திக்க வேண்டும்? கீழ்வரும் குணங்குறிகள் உங்கள் பிள்ளைகளில் காணப்பட்டால் உடனடியாக உங்கள் பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதியுங்கள் இரத்த வெல்லம் தொடர்ச்சியாக உயர் பெறுமானத்துடன் இருத்தல். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும். வயிற்றுவலி நோயுற்று இருத்தலும் தொடர்ச்சியான மயக்கமும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் 15. உங்களிடம் குளுக்கோமீற்றர் இல்லாதபோது பிள்ளையின் இரத்த வெல்லமட்டம் உயர்ந்துள்ளதை அறிவது எப்படி? இரத்த வெல்லம் 180mg/dl ( 10mmol/l) இலும் […]

ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது. தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது. மோசமான நோய் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது உடல் நீரின் மூலம் மற்றவர்களுக்கு காமாலை பரவுகிறது. பச்சை குத்தும் […]

சிறுவர்களில் ஏற்படும் பொதுவான நோயாக சிறுநீர்த் தொகுதிச் தொற்றுக் காணப்படுகின்றது. இது பொதுவாக பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. பொதுவாக குடலில் காணப்படும் பக்ரீரியாக்களே காரணமாகின்றது. இவை சிறுநீர் வழியினூடாக மேல் நோக்கிச் சென்று நோயினை விளைவிக்கின்றது. சிறுநீர்த் தொகுதியினை மேற்பக்க, கீழ்பக்க சிறுநீர்த் தொகுதி என இரண்டுவகையாகப் பிரித்து நோக்கலாம். மேற்பக்க சிறுநீர்த் தொகுதியினுள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்கான் என்பன உள்ளடங்குகின்றன. கீழ்ப்பக்கச் சிறுநீர்தொகுதியினுள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வழி என்பன உள்ளடங்குகின்றன. சிறுநீர்த்தொகுதித் தொற்றுக்களில் பயிலோநெப்ரைற்றிஸ் (Pyelonephritis) […]